ஏன் சில மக்களால் வெற்றியை காத்துக்கொள்ளமுடியவில்லை? Oakland, California, USA 57-0324 1கன்ஸாஸில் உள்ள விச்சிதாவில் வெள்ளிக்கிழமை முதற்கொண்டு கூட்டத்தை நடத்த, செவ்வாய் இரவு அல்லது புதன் காலையில் அங்கு செல்வதை குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பனிப் பொழிவினிமித்தம் என்னால் வடக்கு வழியாக கடந்து போக முடியாது என்று அவர்களிடத்தில் கூறினேன். 'நம்பிடுவாய்“ (Only Believe) என்ற பாடல் தொடங்குவதை கேட்டவாறு நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தோம்.நான் அவரை நோக்கி, 'ஒவ்வொரு தேசத்திலும், அநேக பாஷைகளில் மக்கள் கடந்த பத்து வருடங்களாக அல்லது அதற்கு மேலாக அந்த பாடலை பாடி என்னை பிரசங்க மேடைக்கு வரவழைப்பார்கள்”, என்று கூறினேன். மேலும் 'கர்த்தராகிய இயேசு வருவதற்கு முன் நான் கடந்து போவேனென்றால், நான் மண்ணுக்குள் போகும்போது அவர்கள் யாவரும் அங்கே நின்றபடி என் சரீரம் மண்ணுக்குள் இறக்கப்படுபோது 'நம்பிடுவாய்“ என்று பாடுவார்கள்”, என்றேன். மேலும், 'நான் பரலோகத்துக்கு வரும்போது, எப்படியெனில் முன்னமே மரித்து அங்கு கடந்து போனவர்களோடு சேர்ந்து நாம் அந்த பாடலை பாடுவோம் என்று நம்புகிறேன்“, என்றேன். ஏனெனில் உண்மையாகவே நான் விசுவாசிப்பது என்னவென்றால், அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவாயிருக்கிறது. 2இங்கே ஜெபிக்கப்படுவதற்காக கைக்குட்டைகளும், மற்ற பொருட்களும் இருக்கிறது. அது தாமே மக்களின் விசுவாசத்தை பெரிதாக வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. என்னுடைய ஊழியத்தின் பெரும்பாலான பாகம், கிட்டத்தட்ட, இந்த கைக்குட்டைகளையும், மற்றவைகளையும் ஜெபித்து அனுப்புவதாயிருக்கிறது. ஏனெனில் நான் அதிகமான மக்களை தொடர்பு கொள்கிறவனாயிருக்கிறேன். அநேக முறை இவ்விதமாக சொல்லப்பட்டிருக்கிறது, சகோதரன் பிரான்ஹாம், 'சகோதரன் ராபர்ட்ஸ் அல்லது சகோதரன் ஆலன் அல்லது அப்படிப்பட்ட வேறு சிலர் ஐநூறு பேருக்கு ஜெபிக்கிறார்கள். நீங்களோ மூன்று அல்லது நான்கு பேருக்குத்தான் ஜெபிக்கிறீர்கள்“. சரி, அது ஒரு வேளை உண்மையாயிருக்கலாம். ஆனால் உங்களுக்கு தெரியுமா, தேவன் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாரோ அதை அவர்கள் செய்கிறார்கள், நானும் தேவன் என்னிடத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாரோ அதை தான் செய்கிறேன். என்னுடைய ஊழியம் சற்று வித்தியாசப்பட்டதாய் இருக்கிறது. ஆனால் நான் இந்த கைக்குட்டைகள், ஆடைகளுக்கு பாதுகாப்பாக அணியும் ஏப்ரான்ஸ் மற்றும் சிறு துணிகள் மூலம் அநேக மக்களோடு இவ்வழியில் தொடர்பு கொள்கிறேன். நீங்கள் அதை பெற்றுக் கொள்ள விரும்பினால், அதை என்னுடைய வீட்டிற்கு இந்த விலாசத்தில்: ஜெபர்ஸன்வில், இந்தியானா, தபால்பெட்டி எண் 325-ல் அனுப்ப எந்நேரமும் வரவேற்க்கப்படுகிறீர்கள். அல்லது வெறுமனே ஜெபர்ஸன்வில் என்று எழுதினாலும் அது என்னிடத்தில் வந்து சேரும். நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம், ஏனெனில் அதை ஒவ்வொரு வாரமும்ஆயிரக்கணக்கான மக்களுக்கு உலகம் முழுவதும் அனுப்புகிறோம். தங்களுடைய சுகத்திற்காக தேவன்மேல் விசுவாசம் வைத்து, விசுவாசிக்கிற மக்களால் மகத்தான வெற்றியை பெற்றுக் கொள்ள முடிகிறது. 3இப்பொழுது, நாம் இந்த பகல்பொழுது புறப்படுவதற்குமுன் இதன்மேல் கரங்களை வைத்து ஜெபிப்போம், பின்னர் நீங்கள் அதை பெற்றுக் கொள்ளலாம். எனினும் அதில் ஒன்றை இங்கே உங்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லையென்றால், என்னுடைய விலாசத்திற்கு கடிதம் எழுதுங்கள். முற்றிலும் இலவசமாக அது உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அனுப்புகிற எதற்கும், எந்த ஒரு காரியத்திற்கும் கட்டணம் வசூலிப்பது கிடையாது. எதற்கும் எந்த சேவை கட்டணமும், எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பது கிடையாது. நம்மிடத்தில் சிலபுத்தகங்கள் உள்ளன. திங்கட்கிழமை அன்று..... ஏறக்குறைய பாதிபெட்டி அளவுபுத்தகங்கள் மீதி இருக்கிறது என்று பையன்கள், ஒரு சில நிமிடத்திற்கு முன் என்னிடத்தில் கூறினார்கள். அதை நாங்கள் ஞாயிற்று கிழமைகளில் விற்பனை செய்வது கிடையாது. திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகென்று படங்களில் ஒரு சில மட்டுமே மீதியாயுள்ளது. அதை நாங்கள் அச்சடிப்பவர்களிடமிருந்து பணம் செலுத்தி வாங்குகிறோம். நாங்கள் அதை நாற்பது சென்ட்டுக்கு குறைய வாங்குகிற விலைக்கே வெளியே கொடுக்கிறோம். மக்களிடத்தில் பணம் இல்லை, ஆனாலும் அவர்கள் அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்று இருக்கிறார்கள், நாங்களும் அதை எவ்விதத்திலாவது அவர்களுக்கு அதை கொடுக்கிறோம். தேவன் எவ்விதத்திலாவது நாங்கள் அதை கொடுக்கும்படி வாய்க்கச் செய்கிறார். எனவே எதற்கும் விலை வைப்பதில்லை. எனவே நீங்கள் எதற்கும் தயக்கப்படாமல் எங்களுக்கு எழுதுங்கள் அல்லது உங்கள் ஜீவியத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பானதாக்க எவ்விதத்திலாவது உங்களுக்கு நாங்கள் உதவவும், உங்கள் சோதனைகளை கொஞ்சம் எளிதாக்கவும், அதற்காகத் தான் நானும் இங்கே இருக்கிறேன். அதை செய்யத்தான் நான் இங்கே இருக்கிறேன். 4நான் தனிப்பட்ட விதத்தில் உங்கள் ஒவ்வொருத்தருடனும் வீட்டிற்கு சென்று, உங்களோடு கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதை செய்ய விரும்புகிறேன், ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை. என்னால் அப்படி செய்ய முடியவில்லை. ஆனால் நீங்கள் அதை புரிந்துக் கொண்டீர்கள் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். எனவே நீங்கள் எல்லோரும் எனக்காக செய்ய வேண்டிய காரியம் இருக்கிறது, அது நீங்கள் எனக்காக ஜெபிப்பதுதான். காரணம் எனக்கு தெரிந்தமட்டும், மற்ற எதைக் காட்டிலும் எனக்கு தேவையானது ஜெபம் மட்டுமே. என்னுடைய தொண்டை மிகவும் கரகரப்பாய் இருக்கிறது. நான், உங்களுக்கு கூறினதுபோல, கிட்டத்தட்ட ஒரு இரவுகூட ஓய்வில்லாமல் இதுவரைக்கும் நான்கு மாதங்களாக தொடர்ந்து நீண்ட தூரம் பிரசங்கம் செய்வதிலும், வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதிலும் எந்நேரமும் பயணம் செய்து கொண்டிருந்தேன். அவ்வளவு நீண்ட காலம் பிரசங்கம் செய்த பின்பு நிச்சயமாக நீங்கள் ஒரு வித்தியாசத்தை உங்களால் கூறமுடியும். எனவே, பிரசங்கம் செய்த பின்பு எனக்குஎவ்வளவு கடினமாயிருக்கிறதோ அதுபோல சுகமளிக்கும் ஆராதனைகளும் எனக்கு இரண்டு மடங்கு கடினத்தை ஏற்படுத்தும் என்று உங்களால் சிந்தித்து பார்க்க முடியும். 5எனவே இந்த மத்தியவேளையில், கர்த்தருக்கு சித்தமானால், மக்களிடத்தில் சற்று நேரம் பேசுவதற்காக நாம் ஒரு பொருளை தெரிந்தெடுத்திருக்கிறோம். அதன் பிறகு மறுபடியும் நாளைக்கு சுகமளிக்கும் ஆராதனைகளும், மற்றவைகளும் ஆரம்பமாகும். நம்முடைய தேவன் என்ன செய்வார் என்று நமக்கு தெரியாது. ஒருவேளை இந்த மதியவேளையில் தேவன் இறங்கி வந்து, நாம் இதுவரையிலும் பெற்றிராத அளவுக்கு சுகமளிக்கும் ஆராதனையை பெற்றுக்கொள்ளும்படி செய்வார். நமக்கு அது தெரியாது. அதைஅவர் தன்னுடைய சொந்த வழியில் செய்கிறார். நாம் வெறுமனே அவருடைய வழி நடத்துதலை பின்பற்ற வேண்டும். 6இப்பொழுது நாம் எப்பொழுதும் படிக்கிற வழியில் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையை திறப்பதற்கு முன், அவரிடத்தில் நாம் தலையை தாழ்த்தி, ஜெபத்தில் சற்று அவரோடு கூட பேசுவோம். எங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட பரலோக பிதாவே, இந்த அருமையான, பெரிய வளாகத்திற்குள் இம்மத்திய வேளையில் வரும்படி செய்ததற்காகவும், எங்கள் தலைக்குமேல் உள்ள பாதுகாப்பு கூரைக்காகவும், உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இங்கே கூடும்படி செய்த சிலாக்கியத்திற்காகவும் உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இருளும், பயங்கரமுமான முடிவின் காலத்தில்இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் உம்மேல் விசுவாசம் வைத்து, சீக்கிரத்தில் நடைபெறவுள்ள உம்முடைய வருகையை எதிர்பார்த்துஇருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும் செய்தீர். மேலும் விளைச்சலின் சிறந்த பகுதியானவர்களும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களுமாகிய இவர்கள், ஒக்லாண்டிலும் (Oakland), அதை சுற்றிலுமிருந்து இங்கே கூடிவந்திருக்கிறார்கள் என்று நாங்கள் உணர்கிறோம். அவர்கள் ஒரு நோக்கத்திற்காகவே இங்கே வந்திருக்கிறார்கள். அது உம்முடைய வார்த்தையை கேட்கவும், அதை சுற்றிலும் ஐக்கியம் கொள்ளவுமே. 7எங்கள் பிதாவே, இந்த ஆராதனையை உம்முடைய சொந்தகரத்துக்குள்ளாகவும், உம்முடைய சொந்த கட்டுக்குள்ளாகவும் எடுத்துக் கொண்டு உமக்கே மகிமையை பெற்றுக் கொள்ளும்படிக்கு நாங்கள் தாழ்மையுடன் ஜெபிக்கிறோம். பேசப்போகிற சத்தத்தை பரிசுத்தப்படுத்தும். பிதாவே, என்னிடத்திலுள்ள யாவும், நிச்சயமாகவே உம்முடையது, ஆனாலும் அது உமக்கே திரும்பக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு இருதயமும் அதை பெற்றுக் கொள்ளும்படிக்கு, கேட்கிற காதுகளை பரிசுத்தப்படுத்தும்.அது தாமே மனுஷனுடைய செய்தி என்று எண்ணப்படாமல், ஆனால் தேவனிடத்திலிருந்து வந்த ஒன்றாகஇது எண்ணப்படட்டும். ஏனெனில் வெகு சீக்கிரத்தில் சம்பவிக்கப்போகிற அந்த மணிவேளையில் நாங்கள் உமக்கு முன்பாக பரிசுத்தமாகவும், பழுதற்றதாகவும், நிற்க, ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும்படிக்கு நாங்கள் ஒவ்வொரு காரியத்தையும் கவனமாய் கேட்கும்படிக்கு காத்துக் கொண்டு இருக்கிறோம். இந்த ஆசீர்வாதத்தை கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 8எசேக்கியேல் 36-ம் அதிகாரம், 26-ம் வசனத்தை நான் வாசிக்கப்போகிறேன். (ஒருவர் தீர்க்கதரிசனம்உரைக்கிறார்) இந்த வார்த்தைக்காக தேவனுக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம். அதுஎப்பொழுதுமே நமக்கு தைரியத்தை கொடுக்கிறதாயிருக்கிறது. ஆகவே, நாம் ஒரு பாடலை பாடுவது வழக்கம்: 'நாமெல்லாரும் தைரியம் கொள்வோம், ஏனெனில் நாம் தனிமையாகவிடப்பட்டவர்களாயில்லை“. அது சரிதான். கர்த்தர் இங்கேஇருக்கிறார். அதை நாம் விசுவாசிக்கிறோம். உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக்கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக்கைக் கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். கர்த்தர் தாமே வாசித்த அவருடைய வார்த்தையோடு கூடஆசீர்வாதத்தை கூட்டுவாராக. எசேக்கியேல் 36-ம் அதிகாரம் 26 மற்றும் 27 வசனங்கள். இப்பொழுது, இந்த பெரிய, வல்லமையான தீர்க்கதரிசி எசேக்கியேல் மற்றும் அவருடைய தீர்க்கதரிசனத்தின்மேல் இம்மதிய வேளையில் நாம் பேச விரும்புகிறோம். வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள்தேவனுடைய கழுகுகள் என்று எண்ணப்படுவதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 9எனவே, நான் உங்களுக்கு பிரசங்கித்தவண்ணமாக, இயற்கையை (Nature) பற்றி படித்திருக்கிறோம், காரணம் அதுதாமே என்னை கிறிஸ்துவண்டையில் வழிநடத்தின முதல் வேதாகமமாயிருக்கிறது. எங்களுடைய வீட்டில் வேதாகமம் என்ற ஒன்று இருந்ததே இல்லை.எனக்கு தெரிந்த மட்டும், நான் இருபது வயது ஆகும் வரை எங்கள் வீட்டில் நாங்கள் வேதாகமத்தை பார்த்ததேயில்லை. நாங்கள் ஒரு பக்தியான குடும்பமாகவும் இருந்ததில்லை. இதற்கு முன்பாக எங்களுடைய வீட்டார் கத்தோலிக்கர்களாக இருந்தார்கள். அவர்கள் சபைக்கு வெளியில் திருமணத்தை செய்து கொண்டு, சபையை விட்டுவிலகி பிரிந்துப் போனவர்கள். அவர்கள் எந்த ஒரு மார்க்கத்தையும் பின் பற்றினவர்களாக இருந்தது இல்லை. அதன் பின்னர், கர்த்தர் தாமே தம்முடைய கிருபையினால் என்னை தெரிந்துகொண்டார். அதுதான் என்னை அவரை நேசிக்கும்படி செய்கிறது. ஓ எனக்குள்ளாக இருக்கும் ஏதோ ஒன்று என்னை பிடித்து வைத்திருக்கிறது; அது தேவனுடைய அன்பாய் இருக்கிறது. ஆகவே, நான் இயற்கையை பார்க்கும்போது, அது தேவனுடைய மகத்தான ஞானத்தை அறிந்து கொள்ளவும், இயற்கையின் காரியங்களை புரிந்து கொள்ளவும் செய்கிறது, எனவே கல்வியறிவு இல்லாமல், என்னால்இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையில் (Nature)உள்ள எல்லா காரியங்களும், இயற்கைக்கு மேம்பட்ட (Supernatural) காரியங்களுக்கு மாதிரியாய், (type) இருக்கிறது. அதை நீங்கள்புரிந்து கொள்கிறீர்களா, இல்லையா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அது உண்மை. பூமியில் உள்ள ஒவ்வொரு காரியமும் மேலே உள்ள ஏதோ காரியத்தினால் உருவாக்கப்பட்டதாய் இருக்கிறது. அதுதாமே மாதிரியும் (type), நிழலாட்டமும் (shadow). இன்னும் அதுபோன்ற காரியமுமாய் இருக்கிறது. பூமியில் நம்முடைய சொந்த நிழலைப் போன்ற இப்பொழுது இங்கிருக்கிற ஜீவியம் அது தாமே மகிமையான உயிர்த்தெழுதலில் எல்லா பாவமும், நோயும், துக்கங்களும், மரணமும் ஒழிந்து போனபிறகு நாம் என்னவாக இருப்போம் என்பதற்கு மாதிரியாய் இருக்கிறது. 10கழுகு, அது தீர்க்கதரிசிக்கு மாதிரியாய் இருக்கிறது. மேலும் கழுகு அது ஒரு வல்லமையான பறவை. ஒரு நாளில் சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் என் வாழ்நாளில் நான் பார்த்த காட்சிகளில் பரிதாபமான ஒன்றாக அது இருந்தது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் என்னுடைய பையன் என்னிடத்தில் கூறிக்கொண்டிருந்தான், அது இங்கே உள்ள ஏரிக்கு அப்பால்அவர்கள் ஒரு கழுகை வைத்திருக்கிறார்கள், அது ஒரு சிறிய இடம், ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையைப் போன்ற இடம், அங்கே அவர்கள் சில மிருகங்களையும் வைத்திருக்கிறார்கள். அதை நான் பார்க்கக்கூட விரும்பவில்லை. நான் ஏதோ ஒன்றை பார்த்து வெறுக்கக் கூடியவனாய் இருப்பேனென்றால் அது கூண்டில் அடைக்கப்பட்ட ஒன்றாயிருக்கிறது. அது போலவே கிறிஸ்தவர்கள் கூண்டில் அடைக்கப்பட்டு இருப்பதை பார்க்க நான் வெறுக்கிறேன். உங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பறவைக்கு (Canary Bird) நீங்கள் எல்லாவிதமான மார்க்க சம்பிரதாய (Traditional) ஆகாரத்தை அதற்கு கொடுத்து, அதை கூண்டில் அடைத்து வைப்பதால் அதற்கு என்ன நன்மை அது செய்யப்போகிறது? அதற்கு நல்ல ஆகாரத்தை கொடுத்து, அதினுடைய சிறகுகளை ஆரோக்கியமாகவளரச் செய்து, அது பறக்கும்படிக்கு சுதந்திரமான இடத்தை கொடுக்காத பட்சத்தில் அதற்கு என்ன பயன்? அவ்விதமாகத்தான் கிறிஸ்தவனும் கூண்டில் அடைக்கப்பட்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். நாம் விடுதலையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நாம் (தேவனுடைய) வார்த்தையை வாசித்து, அதை விசுவாசிக்கும் போது நமக்கு சுதந்திரம் கிடைக்கிறது நிச்சயமாக. நாம் புறப்பட்டு, தொடர்ந்து முன்னேறி, நம்முடைய விசுவாசத்தை பயிற்சி செய்வோமாக. 11அதன்பின் நான் பார்த்தபோது, இந்த பெரிய, வல்லமையான பறவையான கழுகு தன் பெரிய இறக்கைகளை கொண்டு கூண்டில் மோதி அடித்து, பின்பக்கமாக கீழே விழும். பின்னர் வானத்தை மேலே நோக்கி பார்த்துக்கொண்டு இருக்கும். அது மறுபடியும் எழும்பி தன் இறக்கையிலிருந்து இறகுகளெல்லாம் கீழேவிழும் அளவுக்கு கூண்டில் அடித்து, அதனுடைய தலை முழுவதும் அடிப்பட்ட வண்ணமாய், அதனுடைய முதுகினால் தரையில் படுத்துகொண்டு இருக்கும். அது அந்த தடிமனான இரும்பு தடுப்பு கம்பிகளில் மோதி, திரும்பி பறந்து சென்று, மேலே நோக்கி பார்த்துக் கொண்டிருக்கும்; தன்னுடைய சோர்ந்து போன கண்களால் வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும், ஏனெனில் அது மேலே (Heavenly) வாசம் செய்யும் ஒரு பறவை.அது இருக்கின்ற வேறெந்த பறவையை காட்டிலும் அதிக உயரம் பறக்கக்கூடியது. ஏன், பருந்து கூட அதற்கு எவ்விதத்திலும் ஈடாகாது. பூமியிலுள்ள ஒரு பறவை கூட கழுகோடு பறக்க முடியாது. அது ஆகாயத்தில் உயரமேலே பறந்து சென்றுவிடும். வேறெந்த பறவையும் அவ்வளவு உயரத்துக்கு அதனோடு பறக்க முடியாது, ஏனென்றால் அவ்வளவு உயரத்துக்கு பறக்கும்படிக்கு அது வடிவமைக்கப்படவில்லை. அது அவ்வளவு உயரத்துக்கு பறந்து செல்லுமானால், அது மரித்து போகும் அங்கே காற்றினுடைய அளவு மிகவும் குறைவாக இருப்பதினால், அதினால் சுவாசிக்க முடியாமல் போய், மாண்டு, பூமியின் மீதாக விழத்தொடங்கிவிடும். ஆனால் கழுகோ உயரே வானில் பறக்கும்படிக்கு வடிவமைக்கப்பட்ட தாயிருக்கிறது. 12தேவன் என்னோடு இடைபட்டு பேசும்போது, இம்மதிய வேளையில் நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொள்வீர்களானால், அது மக்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். பாருங்கள், வரங்களும், அழைப்பும் மனந்திரும்புதலுக்கு முன்னதாகவே ஒருவருக்கு அருளப்பட்டிருக்கிறது. நமக்கு ஒரு மோக்கிங்பேர்டு என்று அழைக்கப்படக்கூடிய பறவை (Mockingbird) தேவைப்படலாம். நமக்கு பாடும் ஒரு சிறு பறவை தேவைப்படலாம். நமக்கு இன்னும் மற்ற எல்லா பறவைகளும், கழுகுகளும் தேவைப்படலாம். ஒரு கழுகுதான் கழுகாய் இருப்பதை தவிர்க முடியாது, ஏனெனில் அது ஒரு கழுகு; தேவன் அதை ஒரு கழுகாகவே இருக்கும்படி படைத்திருக்கிறார். மேலும் மற்ற எந்த பறவையும் அதனோடு உயர பறக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவைகளால் அவ்வளவு உயரத்துக்கு போகமுடியாது. அது போல கழுகுகளாலும் அந்த சிறிய ரீங்காரப் பறவையைப் போல் (hummingbird) வேகமாகவும், துரிதமாகவும் செயல்பட முடியாது. ஆனால் ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய ஸ்தானம் உண்டு. சபையினுடைய ஒவ்வொரு வரத்திற்கும் அதற்குரிய ஸ்தானமுண்டு. ஒன்று கழுகாயிருந்தாலும், ஒன்று வேறொன்றாயிருந்தாலும், இன்னும் ஒன்று வேறொன்றாயிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் தேவனுடைய மகத்தான கானியாட்சியில் நன்மைக்கேதுவாய் இணைந்து கிரியை செய்கிறது. எனவே ரீங்காரப் பறவை கழுகைப் போல இருக்க வேண்டும் என்று முயற்சித்தால் அது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். அது போல கழுகும் ரீங்காரப் பறவையைப் போல இருக்க வேண்டும் என்று முயற்சித்தால் அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும், பாருங்கள். மேலும் புறாவும் காகத்தை போல இருக்க முயற்சித்தால்,அது மரித்து போகும். காகமும் புறாவைப் போல் ஆக முடியாது. எனவே அதுதான் காரியம். நாமெல்லாரும் வித்தியாசமானவர்கள். தேவனும் அவ்வழியில் தான் நம்மைஉண்டாக்கியிருக்கிறார். 13நாம் அவரை குறித்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை கழுகுக்கு ஒப்பிடுகிறார். இப்பொழுது, அவர் அந்த விதமாக ஒப்பிடுவதற்கு காரணம், என்னவென்றால் நீங்கள் அதிக உயரம் செல்லும்போது உங்களால்அதிக தூரம் பார்க்க முடியும். நீங்கள் பூமியிலிருந்து அதிக உயரத்துக்கு செல்வீர்களானால், அப்பொழுது முழு பூமி உருண்டையாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும். எனவே நீங்கள் அதிக உயரம் செல்ல, செல்ல உங்களால் அதிக தூரத்திற்கு பார்க்க முடியும். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளை தேவன் இவ்விதமாக குறிப்பிடுகிறார், எப்படியெனில், 'பூர்வ காலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்கு திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்“. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் ஆவியில் மேலே எழும்பி, மிக உயரத்தில் போவதால், மிக தொலைவில் உள்ள காரியங்களை நோக்கி, வரப்போகிற காரியங்களை அவர்களால் பார்க்க முடியும். தேவன் அவர்களை மேலே உயர்த்துவார். எனவே, கழுகானது அதிக உயரத்துக்கு பறந்து சென்று, அது பறந்து சென்ற திராணிக்கு ஏற்றபடி அதனுடைய கண்களால் பார்க்க முடியவில்லையென்றால், அதன்பின் அது அவ்வளவு உயரத்துக்கு பறந்து சென்று அதினால் பார்க்க முடியாத பட்சத்தில்,அங்கே உயரபறந்து சென்றது எவ்விதத்திலும் அதற்கு நன்மை தராது. ஆனால் அதன் கண்ணானது அதினுடைய மற்ற சரீரத்துக்கு இணையாக உருவாக்கப் பட்டிருக்கி றது. ஆகவே அது அங்கே மேலே உயரசெல்லும்போது அதினால் பார்க்கமுடியும். மிக தொலைவில் உள்ளதையும் தாண்டி அதினால் பார்க்க முடியும். 14அவ்விதமே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் ஆவியில் மேல் எழும்பி, உயர சென்று, நிகழப்போகிற காரியங்களை அவர்களால் பார்க்க முடியும். தேவனுடைய கழுகுகளாகிய அவர்களுடைய தீர்க்கதரிசிகளில் ஒருவனாக எசேக்கியேல் இருந்தான். அவன் உயர சென்று, மிக தொலைவில் உள்ளதை அவனால் பார்க்க முடிந்தது, எப்படியெனில் இப்பொழுது இருக்கும்நம்முடைய காலம் வரைக்கும் அவனால் பார்க்கமுடிந்தது. தேவனுடைய ஆவியினால் அவன் மேலேஉயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் தாண்டி அவனால் பார்க்க முடிந்தது. நாம் ஜீவிக்கிற இந்த நாளை அவன் பார்த்தான், எனவே அதைக் குறித்து அவனால் எழுத முடிந்தது. அது நிறைவேறும் போது அதை நம்மால் காண முடியும். வேதாகம தீர்க்கதரிசிகள் கூறின ஒவ்வொரு வார்த்தையும் நிச்சயமாக நிறைவேறும். சிலசமயங்களில் அதை விசுவாசிப்பதற்கு நமக்கு கடினமாயிருக்கும், ஆனால் தேவன் அதை எவ்விதத்திலாவது நிறைவேற்றுவார், ஏனெனில் அது அவருடைய வார்த்தை. அவர் சர்வ ஞானி; அவர் முடிவற்றவர்; அவர் சர்வத்தையும் அறிந்திருக்கிறார்; அவர் சரியாக நடந்து முடிந்ததையும், நடக்கப் போவதையும் அறிந்திருக்கிறார். ஆகவேதான், ஒவ்வொன்றும் அவருடைய நன்மைக்கு ஏதுவாக கிரியை செய்யும்படிக்கு அவரால் முன்குறிக்க முடிந்தது. 15இப்பொழுது, மனிதன் சுயாதீன (Free Moral Agency)அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கிறான். தேவன் ஒரு மனிதனை எடுத்து, 'இப்பொழுது, நான் உன்னை இதைச் செய்யும்படி செய்து, நான் உன்னை இழந்து போனவனாக (Lost man) செய்து, நான் உன்னை இரட்சிக்க (Saved man) போகிறேன்“ என்று அவனிடத்தில் கூறமாட்டார். அது தேவனுடைய சுபாவம் ஆகாது. இல்லை. எவரும் கெட்டுப் போக வேண்டும் என்பது அவரது சித்தமில்லை, ஆனால் எல்லோரும் மனந்திரும்ப வேண்டும் என்று சித்தம் கொண்டிருக்கிறார். அவர் முடிவற்ற தேவனாக இருப்பதால்,யார் கெட்டு போவார்கள், யார் கெட்டுப் போகமாட்டார்கள் என்று ஆதியிலிருந்தே அறிந்திருக்கிறார், ஏனென்றால் என்ன நிகழப்போவது என்பது அவருக்கு தெரியும். எனவே, அது அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவருடைய சித்தமில்லை; எல்லோரும் அவரிடத்தில் திரும்பி வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார், ஆனால் யார் வருவார், யார் வரமாட்டார் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். எனவே, அவர் தன்னுடைய முன்னறிவின்படி (Foreknowledge) ஒவ்வொன்றையும் சரியாக அவருடைய திட்டத்தின்படி நடந்திட செய்வார். ஓ, நீங்கள் அப்படிப்பட்ட பிதாவை பெற்றிருப்பதால் சந்தோஷப்படவில்லையா? 16ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகத்தில் பெயரெழுதப்பட்டு இன்றைக்கு இங்கே இருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் இதை சற்று சிந்தியுங்கள், எப்படியெனில் நீங்கள் அதை அங்கே எழுதவில்லை; உங்கள் போதகரும் அதை அங்கே எழுதவில்லை; உங்கள் சபையும் கூட அதை அங்கே எழுதவில்லை; ஆனால் தேவன் தான் அதை அங்கே எழுதிவைத்தார். அதை தேவன் எப்பொழுது செய்தார் என்று தெரியுமா? அது ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறீர்கள்? அதை அதிலிருந்து அழித்து போடுவதற்கு போதுமான மை அழிப்பான் (Ink remover) அல்லது வேறெதுவும் இந்த உலகத்தில் கிடையாது. கவனியுங்கள். உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் உங்கள் பெயரை ஜீவபுத்தகத்தில் எழுதினார் என்று வேதாகமம் கூறுகிறது. நாம் உண்மையிலேயே வெறுமையானவர்கள். அதை செய்வதற்கு உன்னிடத்திலும் ஒன்றுமில்லை; என்னிடத்திலும் அதை செய்வதற்கு ஒன்றுமில்லை; தேவன் தாமே, அவர் ஆட்டுக்குட்டியானவரை, உலகத் தோற்றத்துக்கு முன்னே பலியாக கொன்றபோது (Slew) அதைச்செய்தார். முன்னறிவின்படி, கிறிஸ்து இங்கே இருப்பார் என்றும், அவர் தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் என அழைக்கப்படுவார் என்றும், உலகத் தோற்றத்துக்கு முன்னே அடிக்கப்படுவார் என்பதையும் அவர் அறிந்திருந்தார். உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்களை எல்லாம் அந்த மிருகம் வஞ்சிக்கும். 17பெந்தெகொஸ்தே மக்களாகிய நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த ஒரு காரியம்தான் உங்களிடத்தில் குறைவாயிருக்கிறது. அதுதான் உங்களுக்கு பயத்தையும், தொல்லையையும் கொண்டு வருகிறது. ஓ, நீங்கள் கூறலாம், 'சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் நித்திய பாதுகாப்பையும், இன்னும் எல்லாவற்றையும் விட்டு விலகி மிகவும் ஆழத்துக்குள் சென்று விடுவீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்“ ஓ, இல்லை, நீங்கள் உங்கள்இருதயத்தை வேதாகமத்தின் மேல் வைக்கும் போது அதை குறித்து பயப்படத் தேவையில்லை, அப்படி நடக்கவும் மாட்டாது. அது சரிதான். அது தேவனுடைய வார்த்தை. ஒரு மனிதன் இப்படி கூறலாம், 'சரி, நான் இரட்சிக்கப்பட்டவன். என்....“ நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதைத்தான் நான் செய்வேன். என்னுடைய குறிக்கோள்கள் தவறாயிருக்கிறது என்று நான் அறிந்து கொள்ளும்போது, பின்னர் பலிபீடத்தண்டை (altar) செல்வதுதான் எனக்கு நல்லது. ஏனெனில் தேவன் எனக்குள் இருக்கும்பட்சத்தில், தேவனுக்கு பிரியமான காரியங்களை மட்டுமே நான் செய்யவிரும்புவேன். தான் செய்ய விரும்புவதைச் செய்வதே அவன் சுபாவமாய் இருக்கிறது. ஒரு மனிதனுடைய சுபாவமே (nature) அவனை அவ்விதமாக செய்ய செய்கிறது. அதுதான் அவனுடைய சுபாவம். 18பூமியில் இருக்கப்போகிற ஒவ்வொரு நபரையும் தேவன் ஆதியிலேயே அறிந்திருந்தார். மேலும் பூமியின் மீது இருக்கப் போகிற ஒவ்வொரு ஈயையும், ஒவ்வொரு தெள்ளுப்பூச்சியையும், ஒவ்வொன்றையும் அவர் அறிந்திருந்தார். அவர் முடிவற்றவர், அவர் எல்லாவற்றையும் முன்னமே அறிவார். எனவே, உலகத்தோற்றத்துக்கு முன்னே நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்ட அந்த நாளையும் அவர் அறிந்திருந்தார். இயேசு கூறினது போல், உலகத்தில் பிரசங்கிக்கப்படுகிற சுவிசேஷமானது, வலையை கடலில் போட்டு சகல விதமான மீன்களையும் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்து போடுவதேயல்லாமல் வேறொன்றும் இல்லை. அப்படியானால், பிரசங்கம் செய்வதினால் என்ன பயன் என்று நீங்கள் கூறலாம்? ஒரு பிரசங்கி செய்ய வேண்டிய பங்கு அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பரலோக ராஜ்யம் கடலில் போடப்பட்ட சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. எனவே, அநேக மீன்கள் கடலில் இருக்கிறது, கடைசியான ஒன்று பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படும்போது, அதுவே முடிவாயிருக்கும். எனவே, ஒரு பிரசங்கி வெறுமனே வலையை வீசி, இழுக்கிறான். வேதாகமம் போதிக்கிறது, அந்த பெரிய வலையில் அவன் சகலவிதமான ஜீவன்களையும் பிடித்துக்கொண்டு வருகிறான். அவன் நீர்சிலந்தி (water spider) தவளை, பாம்பு, பல்லி, உணவு ஆமைகள்(terrapin) தலைப்பிரட்டை மற்றும் மீன்களையும் பிடித்து வருகிறான். இப்பொழுது, எது மீன், எது தலைபிரட்டை என்று தீர்மானிப்பது அல்லது நிதானிப்பது என்னுடையது அல்ல. ஆனால், நீங்கள் அவர்களை கவனித்து பார்ப்பீர்களானால், அவர்களுக்குள்ளாக இருக்கிற சுபாவம் அவர்கள் என்னவாயிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும். அது சரிதான். அது மிகவும் உண்மையாயிருக்கிறது. 19சுவிசேஷ கூட்டம் நடப்பதை நீங்கள் கவனியுங்கள். அநேகர் பிரசங்க பீடத்தண்டை வந்து சுற்றி நிற்பார்கள். நிச்சயம், வலை அவர்களை பிடித்து இழுத்தது. அங்கே கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான உணவு ஆமை தலையை தூக்கி, 'நான் அதை துவக்கத்திலேயே விசுவாசிப்பது இல்லை“ என்று சொல்லும். அது துவக்கத்திலேயே ஒரு உணவு ஆமை, அவ்வளவுதான். மேலும், 'உனக்குத் தெரியுமா, அந்த பரிசுத்த உருளையர் கூட்டத்தைக் குறித்து ஏதோ காரியம் இருக்கிறது. என்னால் அவர்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை”, என்று பாம்பு சொல்லும். அது துவக்கத்திலேயே ஒரு பாம்பு அவ்வளவுதான். அதன்பின் நீர் சிலந்தி பிளாப் (flop), பிளாப்,பிளாப், கிளங் (clunk), கிளங் என்று சத்தம் போட்டுக் கொண்டே திரும்பி சென்று விடும். ஏனெனில் அது துவக்கத்திலேயே அவ்விதமாய்தான் இருந்தது. வலையானது அவைகள் மீது வீசப்பட்டபோது, அவையாவும் அவ்விதமாகத்தான் இருந்தன.அது மிகவும் சரியே. ஆனால் அதன் மீது வலை வீசப்பட்டபோது மீன், மீனாகத்தான் இருந்தது. நாம் மீனுக்காக வலையைப் போடுகிறோம்.அதை தேவன் ஒருவர் மட்டுமே தீர்மானிக்க முடியும். 20இந்த கிறிஸ்தவ மார்க்கம் அறிவாற்றல் மிக்கவர்களின் திறமை மீது திடமாக சார்ந்து நிற்கும் பட்சத்தில், நமக்கு பரிசுத்த ஆவி அவசியமே இல்லை.அது சரிதான். கிறிஸ்தவ விசுவாசமானது கல்வி திட்டங்கள், ஸ்தாபனங்கள், இன்னும் அப்படிப்பட்ட பெரிய கட்டிட வளாகங்கள், இன்னும் இன்றைக்கு உள்ள அப்படிப்பட்டவைகளின் மீது சார்ந்து இருக்குமானால், பின்னர் தேவனுடைய சபையை வழி நடத்துவதற்கு பரிசுத்த ஆவி அவசியமே இல்லை. அது சரிதான். அது அவ்விதமாய் இருக்கும் பட்சத்தில், அதன்பின் நாம் செய்ய வேண்டிய சிறந்த காரியம் என்னவெனில், நாம் சரியான திட்டத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம். எனவே, ஸ்தாபனத்தை துவங்கவேண்டும் என்று இருக்கிற ஒவ்வொருவரும், அதை செய்ய தொடங்கட்டும். நம்மால் கட்ட கூடிய பெரிய சபைகளை நாம் கட்டி எழுப்புவோமாக. நம்மால் பெற்றுக் கொள்ளக் கூடிய மிக புத்திசாலியான பிரசங்கிமார்களை நாம் பெற்றுக் கொள்வோமாக. நம்மால் பெற்றுக் கொள்ளக்கூடிய சிறந்த பட்டம் பெற்ற மனிதனை நாம் பெற்றுக் கொள்வோமாக. சபையானது புத்திசாலிகளால் தான் நடத்தப்படவேண்டுமானால், தரித்திரமானவர்களையும், இன்னும் தெருவில் ஜீவிக்கும் அப்படிப்பட்டவர்களையும் வெளியேற்றி, சிறந்த ஆடைகளை உடுத்தினவர்களையும், நம்மால் பெற்றுக் கொள்ளகூடிய சிறந்த மனநிலை உள்ளவர்களையும், சிறந்த புத்திசாலிகளையும் பெற்றுக் கொள்வோமாக. 21ஆனால் சகோதரனே, நாம் பேசிக் கொண்டிருக்கிற இந்த மகத்தான புதிய ஆவி, எசேக்கியேல் இங்கே கண்ட இந்த மகத்தானபுதிய சபை, புத்தி சாதுரியத்தினால் நடத்தப்படமுடியாது. அதுதாமே பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட வேண்டியதாயிருக்கிறது. பரிசுத்தஆவியானவர் சபையை வழிநடத்தும் பட்சத்தில், ஸ்தாபனத்தை குறித்தோ, புத்திசாதுரியமானவர்களைக் குறித்தோ, யார் மிக நேர்த்தியாய் 'ஆமென்“ சொல்வார்கள், யார் சிறந்த உடையை உடுத்துவார்கள் என்பதை குறித்த அப்படிப்பட்ட விவாதங்கள் (fussing) நமக்கு அவசியமிராது. அது நமக்குஅவசியமே இல்லை. அப்படியானால் நமக்கு இயேசு எதை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாரோ அதையே நாம் செய்வோமாக. தெருக்களிலும், சந்துகளிலும் சென்று முடமானவர்களையும், சப்பாணிகளையும், குருடரையும், தரித்திரரையும், இன்னும் எவராயிருந்தாலும் உள்ளே கொண்டு வருவோம். ஏனெனில் வரப்போகிற நாட்கள் ஒன்றில் பெரிய விருந்து நடக்கப்போகிறது. அதுதான் நமக்கு தேவை. அப்படிப்பட்ட மார்க்கம் தான் நமக்கு தேவையாயிருக்கிறது. அதன்பின் அதை நாம் எப்படி பெற்றுக் கொண்டோம் என்று நாம் ஆச்சரியப்படுவோம். 22இப்பொழுது, நாம் கனியை உற்பத்தி செய்யும்படிக்கு நாம் கட்டளையிடப்படவில்லை. இல்லை ஐயா. கனியை நாம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று எந்த இடத்திலும் தேவன் கூறவில்லை. நாம் கனி கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். எனவே கனி உற்பத்தி செய்யப்படுவதற்கும், கனி கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இப்பொழுது, நாம் கல்வியை உற்பத்தி செய்கிறோம்.நாம் மனோதத்துவத்தை உற்பத்தி செய்கிறோம். நாம் வெளித் தோற்றமான புத்தி சாதுரியத்தை உற்பத்தி செய்கிறோம். ஆனால் கனி கொடுக்க வேண்டுமானால், அது தாமே உள்ளிருந்து வெளியே வர வேண்டியதாயிருக்கிறது. நாமோ அதை நம்முடைய வெளிப்புறத்தில் பூச முயற்சிக்கிறோம். ஆனால் தேவனுடைய சபையோ அவ்விதமாக இல்லை; அது தாமே உள்ளிருந்து வெளியே வருகிறதாயிருக்கிறது. ஆப்பிள் பழம் மரத்தின் வெளியிலிருந்து வருவதில்லை; அது மரத்துக்கு உள்ளேயிருந்து வெளியே வருகிறது. மரத்தினுடைய ஜீவன் அது என்னவாயிருக்கிறது என்பதை காண்பிக்கிறது. மேலும்அது கொடுக்கிற கனிகள் மூலமாகத்தான் அது என்னவாயிருக்கிறது என்று அறியப்படுகிறது. இன்றைக்கு சபையானது... அறியப்படுகிறது. அது வெளிப்புறத்தில் காணப்படும் அறிவுப் பூர்வமான வேதாகம பாண்டித்ய அனுபவத்தையும், இதுவரை பெற்றுக் கொண்டதிலேயே மிக சிறந்த மெருகேற்றப்பட்ட அறிஞர்களையும் தான் பெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் சபையானது எந்த காலத்திலும்பெற்றிராத அளவுக்கு மிகவும் பெலவீனமான பிரசங்க பீடத்தை பெற்றிருக்கிறது. அது சரியே. அதற்கு காரணம் என்னவென்றால் அதை நாம் புத்திசாதுரியத்தினால் (intellectual) கட்டுபடுத்த முயற்சிப்பதுதான். அது தேவனுடைய திட்டமும் இல்லை. தேவன் அதை அவ்விதமாக இருக்கவும் விரும்பவில்லை. இப்பொழுது, கவனியுங்கள். 'சகோதரன் பிரான்ஹாம், எங்களால் எப்படி முடியும்? அதை செய்ய வைக்கிறது எது?“ என்று நீங்கள் கேட்கலாம். நான் இம்மதிய வேளையில், 'ஏன் சில மக்களால் வெற்றியை காத்துக்கொள்ள முடியவில்லை”, என்பதின் பேரில் பேசப்போகிறேன் என்று உங்களிடத்தில் கூறினேன் 23இப்பொழுது, கவனியுங்கள். எனவே சபைக்கு பளபளப்பு (polishing) அவசியம் இல்லை. அதற்கு அதினுடைய தோற்றத்துக்கு புதுப் பொலிவு (face-lifting) கொடுக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை. அதற்கு மறுபடியும் பிறத்தலே (birth) அவசியமாயிருக்கிறது. அதற்கு மனமாற்றம் (conversion) அவசியமாயிருக்கிறது. ஏதோ காரியம் நடந்தாக வேண்டும். வெறுமனே நம்முடைய எல்லைகளை பலப்படுத்தி, புதிய நபர்களை உள்ளே கொண்டுவர வேண்டும் என்பது மட்டும் இல்லை; எழுப்புதல் என்பது ஏதோ புதிய நபர்களை சேர்க்க வேண்டும் என்பதில்லை. ஒரு எழுப்புதல் என்பது நாம் ஏற்கனவே எதை பெற்றிருந்தோமோ அதற்கு புத்துயிர் (revive) கொடுப்பது. அதுதான் நமக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. 24கொஞ்ச நாட்களுக்கு முன், சிகாகோவில் உள்ள அந்த பெரிய, பிரசித்திபெற்ற மிச்சிகன் ஏரிக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அங்கே அதினுடைய அலைகள் துள்ளிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருப்பதை கவனித்தேன். 'ஓ, என்னே, இந்த ஏரி இன்றைக்கு எழுப்புதலை பெற்றிருக்கிறது“, என்று நினைத்தேன். நான் அங்கே நின்றுகொண்டிருந்தபோது என்னோடு கூட வேறு ஒருவரும் இருந்தார். அவர், 'என்னை மன்னியுங்கள், சகோதரன் பிரான்ஹாம்“, என்றார். நான், 'இந்த ஏரி எழுப்புதலை பெற்றிருக்கிறது“, என்றேன். அவர், 'எழுப்புதலா? என்ன எழுப்புதல்?“ என்றார். நான், 'கவனியுங்கள் அது எப்படியாக துள்ளிக் கொண்டும் குதித்துக் கொண்டும், அதினுடைய அலைகளை முன்னும், பின்னும் அடித்துக் கொண்டும்,ஒன்றோடு ஒன்று மோதி நுறைதள்ளிக் கொண்டும் இருக்கிறது“, என்றேன். அவர், 'எழுப்புதலா? என்ன எழுப்புதல்?“ என்றார். நான், 'அது ஒரு களி கூறுதலான நேரத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது“. மேலும்,'ஆனால் நினைவு கூறுங்கள், அது அமைதலாய் இருக்கும்போது எப்படி இருந்ததோ அதே போல அது குதிக்கும் போதும் அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கூடவில்லை”. அது சரிதான். எனவே, நாம் மேலே குதித்து மறுபடியும் பூமிக்கு திரும்பி வரும்போது அதே அளவு தண்ணீர் நமக்கு இருக்குமானால், நம்முடைய குதித்தலும், உரக்க சத்தமிடுவதும், தேவனை துதிப்பதும் அருமையாயிருக்கும். அது சரிதான். எனவே, சபையானது களிகூருதல், பரவசப்பட்டு நடனமாடுதல் மேல் கட்டப்படவில்லை, ஆனால் தேவனுடைய அன்பாகிய, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மேல் கட்டப்பட்டதாயிருக்கிறது. 25'சரி, அப்படியானால் ஒரு எழுப்புதல் என்ன நன்மையை செய்கிறது“, என்று நீங்கள் கேட்கலாம். கடலோ அல்லது ஏரியோ ஒரு எழுப்புதலை பெற்றுக் கொள்வதை நீங்கள் ஒவ்வொரு தடவையும் கவனிப்பீர்களானால், அது தன்னிடத்தில் உள்ள எல்லா குப்பை கூளங்களையும் வெளியே தள்ளுவதற்காக அது வெறுமனே முன்னும் பின்னும் கலக்கிக் கொண்டிருக்கும். எழுப்புதல் முடிந்த பிறகு குப்பை கூளங்கள் கரையில் ஒதுங்கியிருக்கும். எழுப்புதல் நடக்கும் போது அது தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும். ஜீவனுள்ள தேவனுடைய சபையும் தன்னுடைய எல்லா புத்திகெட்ட காரியங்களையும் கலக்கி வெளியே தள்ளுவதற்க்கு அதற்கு ஒரு எழுப்புதல் தேவை என்பதை தேவனும் அறிந்திருக்கிறார். அது சரிதான். எது எழுப்புதலை உண்டு பண்ணகிறது? எது ஏரியை கலக்க செய்கிறது? அதற்கு காரணம் என்னவெனில் அங்கே ஒரு காற்று வீச வேண்டியதாயிருக்கிறது. அது சரிதான். காற்றானது பரலோகத்திலிருந்து வந்து அதற்கு ஒரு எழுப்புதலை கொடுக்கிறது. அது தான் ஒரு சபையை உண்டுபண்ணுகிறது. ஒரு நாளில், பலமாக வீசுகிற காற்று பரலோகத்திலிருந்து வந்தபோது, ஒரு பெந்தெகொஸ்து எழுப்புதல் ஏற்பட்டது. அதுதான் நமக்கு இன்று தேவைபடுகிறது, எப்படியெனில் இன்னொரு பலமாக வீசுகிற காற்று பெந்தெகொஸ்தே சபைமேல் வந்து சிறு சிறு கொள்கைகளையும், வேறுபாடுகளையும் அதினின்று வெளியே தள்ளி, தேவனுடைய அன்பு முழு சுதந்திரத்தையும் எடுத்துக்கொள்ளும்படி செய்வது. எல்லா குப்பை கூளங்களும் கரைக்கு தள்ளப்பட்டு, அவள் முழுமையாய் சுத்தம் செய்யப்பட்டு, மறுபடியும் புதிதாக துவங்கப்பட வேண்டும். 26வேதாகம நாட்களில், உருக்காலைகள் கண்டுபிடிப்பதற்கு முன், தங்கத்தை அடிக்கிறவன், (smelter) அதை எடுத்து அடித்து, மறுபடியும் திருப்பி போட்டு, அதை அடிப்பான்.அவ்விதமாக எல்லா தேவையில்லாத கழிவுகளையும் வெளியே எடுக்கும் வரைக்கும் அவன் அதை அடிப்பான். தங்கத்தை அடிக்கிறவன் எல்லா பொன்னிமிளைகளும் (pyrite - மஞ்சள் நிறமுள்ள பளபளப்பான கனிமம்), முட்டாள் தங்கமும், இன்னும் அது போன்ற தேவையில்லாத யாவும் வெளியே நீக்கப்பட்டு, உண்மையிலேயே அசலான தங்கத்தை அவன் பெற்றுக் கொண்டான் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வானென்றால், தன்னுடைய சொந்த பிரதிபலிப்பை அதில் பார்க்கும்போதுதான் அதை அவன் அறிந்து கொள்வான். அதற்கு பின் அவன் சுத்தமான தங்கத்தை பெற்றுக் கொண்டான் என்பதை அறிவான். கவனியுங்கள், என் அருமையான நண்பர்களே, இன்றைக்கு பரிசுத்த ஆவியானவர் (அவர்தான் அடிக்கிறவர்) இயேசுகிறிஸ்துவின் பிரதிபலிப்பை சபையில் காணுமட்டும், சுவிசேஷத்தை கொண்டு அடிப்பாரானால், அவள் மறுபடியும் சுத்தமாவாள். அது சரிதான். ஆனால் இன்னுமாக நம்மிடத்தில் அதிகமான பொன்னிமிளைகள், செம்பு வேறு காரியங்களும் உண்டு. அது கண்டிப்பாக வெளியே நீக்கப்பட வேண்டியதாயிருக்கிறது, அடிக்கிறவர் மட்டுமே அதை செய்ய முடியும். ஒரு எழுப்புதல், அதுதான் நமக்கு தேவையாயிருக்கிறது. 27இப்பொழுது இந்த புத்தம் புதிய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்ற செய்தியை காய்ந்து போன, சாதாரண,கோட்பாடுகள் கொண்ட சபைக்குள் கொண்டு வர முடியாது. அதை நீங்கள் ஒருபோதும் செய்ய முடியாது.இப்பொழுது நினைவுகூருங்கள், நான் உங்களை முழு இருதயத்தோடும் அன்பு கூருகிறேன், தேவன் அதை உங்களுக்கு தெரியப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். மேலும் எனக்கு வீட்டில் ஒரு சிறுபையன் இருக்கிறான், அவனுக்கு இரண்டு வயதாகிறது, அவன் தவறு செய்வதை நான் பார்த்தும், அவனை திருத்தவில்லையென்றால், நான் அவனை நேசிக்காமல் போகிறேன். அது சரிதான். நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு அவ்வாறே... மேலும் நான் உங்களுக்கு இதை சொல்ல விரும்புகிறேன்.அதென்னவெனில், இந்த தேசத்தில் நம்முடைய ஜீவனுள்ள தேவனுடைய சபையின் மகத்தான அசைவானது இரண்டு பிரிவுகளாக சென்று கொண்டிருக்கிறது. ஒன்று மிகவும் இறுமாப்பாகவும், விறைப்பாகவும், புத்தி சாதுரியமானதாகவும் இருக்கிறது; இன்னொன்று வேறு பக்கம் மிகவும் ஆழமான பகுதிக்கு விலகி சென்றுவிட்டது. அது மிகவும் சரி, சகோதரனே. அது சரிதான். சாலையின் மையப் பகுதியிலிருந்து விலகி மதவெறிப்பிடித்தவர்கள் (fanatic) என்ற இடத்திற்கு சென்றுவிட்டது. 28கொஞ்ச காலத்துக்கு முன் நான் அந்த குறிப்பை கூறினேன், இந்தியானாவின் ஐக்கிய சபையின் (Assemblies of God) குருமாராகிய என்னுடைய நெருங்கிய நண்பர் ராய் வீட் என்னிடத்தில், 'நீங்கள் சாலையின் நடுவில் பயணிக்க வேண்டும் என்று யாரோ ஒருவர் என்னிடத்தில் கூறியதை கேட்டேன்,“ மேலும் அவர், 'உங்களுக்கு தெரியுமா அது ஒரு நல்ல பழக்கம் இல்லை. சாலையின் நடுவில் பயணிக்கிற ஒரு மனிதன் மீது வாகனங்கள் மோதிச்செல்லும்”, என்றார். நான் அவரை சந்தித்து, 'ஆனால் கவனியுங்கள், என் அருமை சகோதரனே, 'நீங்கள் உலக காரியங்களையும் நினைத்து கொண்டிருப்பதால், அது எப்படி காணப்படுகிறதோ அவ்வகையிலேயே நீங்கள் காரியங்களை நிதானிக்கிறீர்கள்“, என்றேன். இது ஒரு ஒருவழிப்பாதை. இதில் ஒருவரும் திரும்பி வருவதில்லை; ஒன்று நீங்கள் தொடர்ந்து போக வேண்டும் அல்லது வழியை விட்டு விலகி போகவேண்டும். அது சரிதான். அது ஒரு வழிப்பாதையாகவே அல்லது வேறு ஏதோ ஒன்றாக இருக்கவேண்டும். ஒன்று நீங்கள் விறைப்பாகவும், சாதாரணமாகவும் இருந்து, இந்த வழியிலிருந்து விலகி மிகவும் ஆழத்துக்கு சென்று விடுவீர்கள் அல்லது தொடர்ந்து கிறிஸ்துவோடு செல்வீர்கள். நீங்கள் திரும்பி, மறுபடியும் வருவதில்லை, இதில் மறுபடியும் திரும்பி வரவேண்டியதில்லை. நீங்கள் தொடர்ந்து போய்க் கொண்டிருப்பீர்கள். இதில் யாரும் திரும்பி வருவதில்லை. 29எனவே, கவனியுங்கள், நண்பர்களே, நமக்கு தேவையானது ஒரு கூட்ட, புதிய அசலான அர்பணிக்கப்பட்ட மக்கள். அது தான் நமக்கு தேவை. இப்பொழுது, இன்றைக்கு செய்தியை, ஒருவேளை நாம்... ஒருவேளை ஜனாதிபதி இந்த பட்டணத்துக்கு வந்து, 'நீங்கள் இங்கிருக்கிற இந்த ஏரியை உடைக்க வேண்டும் என்று ஐந்து வார்த்தைகளை பேசுவாரானால்“ மற்றும் அதுபோன்று ஏதோ காரியத்தை கூறுவாரானால், அந்த ஏரியிலிருக்கிற தண்ணீரை இறைக்க ஆரம்பித்து விடுவார்கள், ஏனென்றால் ஜனாதிபதி அப்படி செய்யும்படி கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் இங்கே ஒரு சுரங்க வழிபாதை அல்லது அது போன்று ஏதோ காரியத்தை செய்ய வேண்டியதாய் இருக்கும். அதை அவர்கள் செய்வார்கள், ஏனெனில் ஜனாதிபதி அப்படி செய்யும்படி கூறியிருக்கிறார். ஆனால் சகோதரனே, நாமோ எந்த ஒரு ஜனாதிபதி வார்த்தையை காட்டிலும் ஒரு மகத்தான புத்தகத்திலிருந்து படித்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாக நம்முடைய ஜனாதிபதி நம்மை கவனித்துக் கொள்கிறார், நான் அவரை நேசிக்கிறேன் மற்றும் அவர் ஒரு அருமையான மனிதர் என்று நினைக்கிறேன். அவர் மக்களுக்கு வெவ்வேறு காரியங்களை செய்கிறார். ஆனால் அது தேசிய சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. நான் எதைக் குறித்து பேசுகிறேனென்றால், தங்கள் பட்டணத்தை எப்படி பேணிக் காக்கவேண்டும் என்று நகர அலுவலர்களிடத்தில் பேசவில்லை; ஆனால் நான் தேவனுடைய வார்த்தையை தேவனுடைய சபையினிடத்தில் பேசிக் கொண்டிருக்கிறேன். இங்குதான் நமக்கு மாற்றம் அவசியமாய்யிருக்கிறது. 30இப்பொழுது, நீங்கள் செய்தியை அவ்வளவு சுலபமாக 'பழைய கால நம்பிக்கையாளர்களிடம்“ கொண்டு போக முடியாது. வேதாகமத்தில் அதை குறித்து வெகு காலத்துக்கு முன் இயேசு பேசியிருக்கிறார். அவர், 'புது திராட்சை மதுபானத்தை பழைய துருத்தியில் வார்த்து வைக்கமுடியாது” என்று கூறியிருக்கிறார். அதற்கு அர்த்தம் என்னவென்று அடிக்கடி நான் வியந்ததுண்டு. 'புது திராட்சை மதுபானத்தை பழைய துருத்தியில் வார்த்து வைத்தல்“ என்று அவர் சொன்னபோது, நம்முடைய கர்த்தர் எதை தெரிவிக்கிறார்? நல்லது, அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணப்போகிறது என்று நான் நினைத்தேன். காரணம், இன்றைக்கு நாம் கண்ணாடி பாட்டில்களை மட்டுமே உபயோகப்படுத்துகிறோம். எனவே அது பழையதோ அல்லது புதியதோ அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணப் போவதில்லை. ஆனால் நான் கிழக்கத்திய நாடுகளுக்கு, ஆசியாவின் கிழக்கு பகுதிகளுக்கு சென்றபோது, அந்நாட்களில் அவர்களுடைய தண்ணீர் குடுவைகள் மிருகத்தினுடைய தோலினால் செய்யப்பட்டது என்பதை அறிந்து கொண்டேன்.மிருகத் தோலினால் ஆன மதுபான துருத்தி; அது பழையதாய், காய்ந்து, இறுகிப்போன பின், அதில் புதிய புளிப்பில்லாத திராட்சை மதுபானம் வார்த்து வைக்கப்படுகிறது, அப்படி வார்த்து வைக்கப்பட்ட புதிய, புளிப்பில்லாத திராட்சை மதுபானத்தில் இன்னுமாக ஜீவ கிருமிகள் இருக்கும். மேலும் அது புளிக்கத் தொடங்கும் போது, ஏன், மிகவும் இறுகிப் போய், விறைத்துபோன அந்த பழைய துருத்திகள் வெடித்துபோகும், அது அதை தாங்கிக் கொள்ள முடியாமல், அது வெடித்து பிளந்து போகும். திராட்சை மதுபானமும் சிந்திப் போகும், துருத்தியும் கிழிந்துபோகும். 31எனவே, இன்றைக்கும் அது அவ்விதமாகவே இருக்கிறது. நீங்கள் இந்த புத்தம் புதிய பரலோகத்திலிருந்து வந்த, பெந்தெகொஸ்தே மதுபானத்தை எடுத்து ஏதோ ஒருவித பழைய காலத்து கோட்பாடுகளுடனும், ஏதோ பழைமையான வழியில் பழக்குவிக்கப்பட்ட, தீவிர நம்பிக்கையுடையவர்களுடனும் இதை சேர்க்க முடியாது. ஏன், அப்படி நீங்கள் செய்வீர்களானால், அவர்களிடத்தில் சென்று பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தையும், தெய்வீக சுகமளித்தலையும், அடையாளங்களையும், அற்புதங்களையும் குறித்து பிரசங்கிப்பீர்களானால், அந்த பழைய துருத்தியோ, 'அற்புதங்களின் நாட்கள் கடந்துபோய்விட்டது. அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னால் இந்த பிரசங்கத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறி விரிவடைந்து, வெடித்து சிதறிப் போய்விடும். அது வெடித்து, கதவு வழியாக வெளியே போய்விடும். அது சரிதான். அதை அவர்களுக்கு பிரசங்கிக்க முடியாது. காரணம் புது பெந்தெகொஸ்தே மதுபானத்தை வார்த்து வைக்க வேண்டுமானால் உங்களுக்கு புது துருத்திகள் அவசியமாயிருக்கிறது. சரிதான். மேலும் புது துருத்திகள் என்பது புது தோலை கொண்டிருக்கும்; அதில் இன்னுமாக மிருகத்தினுடைய எண்ணெய் இருக்கும். எனவே அது விரிவடைந்து கொடுக்கும். நீங்களும் அதனிடத்தில் 'பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், தெய்வீக அன்பையும், தெய்வீக சுகமளித்தலையும், அடையாளங்களையும், அற்புதங்களையும் பிரசங்கித்து, இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்“ என்று வேதாகமம் கூறுகிறது என்பீர்களானால், புதிய துருத்தியும் அதற்கு 'ஆமென்”என்று சொல்லும். அது சரிதான். அது விரிவடைந்து கொடுக்கும். பழைய துருத்தியோ, 'டாக்டர், ஜோன்ஸ், அந்தவிதமாக போதிக்க வேண்டாம்“, என்று சொல்லும். அது தான் காரியம். அங்கேதான் வித்தியாசம் இருக்கிறது. பெந்தெகொஸ்தே செய்தியை பிரசங்கிக்க நமக்கு இன்று எது தேவைப்படுகிறது என்றால் ஒரு புதிய பெந்தெகொஸ்தே தோல்கள் கொண்ட கூட்டம். அது சரியே. 32எனவே இன்றைக்கு பெந்தெகொஸ்து என்பது உங்களுடைய ஸ்தாபனமல்ல.அது ஒரு அனுபவம். அது ஒரு ஸ்தாபனமல்ல பெந்தெகொஸ்து என்பது அது நீங்க பெற்றுக்கொள்கிற ஒரு காரியம். அது சரிதான். அது மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, லூத்தரன்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும், பெந்தெகொஸ்து என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களுக்கும், சிலசமயங்களில் பெந்தெகொஸ்துக்கு மேலாகவும் தங்களை அழைத்துக் கொள்கிறவர்களுக்கும் உரியதாயிருக்கிறது. அது சரிதான். உங்களால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடுமானால் அது ஒரு அனுபவமாயிருக்கிறது. ஓ, அந்த புதிய ஜீவன் கிரியை செய்யத் தொடங்கி, நீங்கள் வேதாகமத்தில், 'நானே உன் நோய்களையெல்லாம் சுகமாக்குகிற பரிகாரியாகிய தேவன்“, என்று படிக்கும் போது, அதன் பின்னர் புது துருத்தியில், ஜீவன் பிரவேசிக்கத் தொடங்கி ,விரிவடைந்து, 'ஆமென், நான் விசுவாசிக்கிறேன், தேவனே” என்று சொல்லும். 33ஆகவே, இப்பொழுது உங்கள் எல்லோருக்குள்ளும் இங்குள்ள பிணத்தை பதப்படுத்துகிற திரவமாகிய போதனையை உங்களுக்குள்ளாக செலுத்தப்படுமானால் என்னவாகும், முதலாவது நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவெனில், நான் எப்பொழுதும் மரித்துபோன ஒருவனுக்கு துயரப்படுகிறவனாயிருக்கிறேன். நான் இங்கு உள்ள சில பிணவறைகளுக்கு சென்று அதை கவனித்திருக்கிறேன். ஒரு மனிதனை அங்கே உள்ளே கொண்டுபோகும் போது அவன் மரித்தவனாயிருக்கிறான், அதன் பிறகு அவன் தொடர்ந்து மரித்த நிலையிலேயே பதப்பட்டிருக்கும் படிக்கு அவனுக்குள் இன்னுமாக அந்த திரவத்தை செலுத்துகிறார்கள். இன்றைக்கு அமெரிக்காவை சுற்றிலும் இருக்கிற பல சபைகளின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் துவக்கத்திலேயே மரித்தவர்களாயிருக்கிறார்கள். நீங்கள் அங்கே உள்ளே போவீர்களானால், நீங்கள் இன்னுமாக தொடர்ந்து மரித்த நிலையிலேயேஇருக்கும்படிக்கு தங்களுடைய பழமையான, அறிவுப்பூர்வமான, பிணத்தை பதப்படுத்தும் திரவத்தை அவர்கள் உங்களுக்குள்ளாக செலுத்துவார்கள். இன்று நமக்கு எது தேவையென்றால் பழம்பாணியான, பரிசுத்த ஆவியின் பெந்தெகொஸ்தே உயிர்த்தெழுதலின் வல்லமை.அது சரிதான். நாம் வளர்ச்சியினிமித்தம் வரும் வலியை பெற்றுக் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் தேவனுக்கு நம்மை விட்டுக் கொடுக்க முடியும். ஓ, நீங்கள் 'ஆமென்“ என்று சொல்லாதபடிக்கு முழுவதும் இறுக்கமாயிருப்பதை நான் வெறுக்கிறேன். ஆம் ஐயா. (சகோதரன் பிரான்ஹாம் உறுமுகிறார்) ஓ, அதை செய்யும்படிக்கு என் நரம்புகள் துடிக்கிறது. 34கொஞ்ச நாட்களுக்கு முன், இங்கே கென்டக்கியில் ஒரு சிறிய பழைய மெத்தோடிஸ்டு சபையில் உண்மையிலேயே பரிசுத்த ஆவியை பெற்ற... அந்த சபையிலிருந்து ஒரு இளம் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் அங்கிருந்து கடிதத்தை பெற்றுக் கொண்டு, லூயிவில்லுக்கு வந்தார்கள். அவர்கள் தங்களை பிரமாண்டமான, பெரிய பட்டணத்து சபையில் இணைத்து கொண்டு மிகவும் இறுகிப்போய் சம்பிரதாயமானவர்களாய் இருந்தார்கள். ஒரு நாள் கென்டக்கியை சேர்ந்த அந்த சிறிய அம்மாள் தன்னுடைய மகனையும், மருமகளையும் பார்க்க வந்தார்கள்.சாதாரணமாக அவர்கள் எப்பொழுதாவது ஒரு நாளைக்கு சபைக்கு சென்று வந்தார்கள். அவர்கள் இன்றைக்கு உள்ள நம்முடைய பெரும்பாலான அமெரிக்காவை போல் வெறுமெனெ ஒரு சாதாரண பெயரளவு கிறிஸ்தவர்களாக சபைக்கு போகாமல் வீட்டிலேயே தரித்திருந்து மற்றவர்கள் செய்வதுபோல் தொலைக்காட்சியை கண்டு களித்து, ஜெபகூட்டத்துக்கு வராமல் விலகி இருந்தார்கள். அதில் மெத்தொடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பெந்தெகொஸ்துகளும், இன்னும் மற்றெல்லாரும் கூடஅடங்குவார்கள். அது உண்மை. அது மிகவும் சரி. நாமும் கூட இதை, அதை பார்ப்பதற்கும் அல்லது கொஞ்சம் ஊர் சுற்றுவதற்கும்; சபைக்கு போகலாம் என்றால் வெப்பம் மிகவும் அதிகமாயிருக்கிறது அல்லது அது போல்ஏதோ காரியத்தை செய்து கூறி சபைக்கு போகாமல் வீட்டிலேயே தங்கி விடுகிறோம். மேலும் நான் நன்றாக இருப்பதாக உணரவில்லை என்று வேறு கூறுகிறோம். எனவே, வரப்போகிற நாட்கள் ஒன்றில் நீ ஆக்கினை தீர்க்கப்பட்டு நியாயத் தீர்ப்பின் கூண்டில் நிற்கும்போது இதைக் காட்டிலும் மோசமாக நீ உணர்வாய்.அது சரிதான். 35பின்னர் உங்களுக்கு தெரியும்,இந்த சிறியவயதான அம்மாள் சபைக்கு போகவேண்டும் என்று இருந்தார்கள். அவள், 'நல்லது, தேனே,நீங்கள் எங்கேசபைக்கு போகிறீர்கள்“, என்றார்கள். எனவே, அவர்களும், 'அம்மா, இங்கே இந்த தெரு முனையில் உள்ள பெரியதிருத்துவ மெதோடிஸ்ட் சபைக்கு போகிறோம்“, என்றார்கள். அவள், 'ஓ, நான் காலையில் சபைக்கு போவது வழக்கம்.இது ஓய்வு நாள் நான் சபைக்கு போயாகவேண்டும்“, என்றார்கள். அதன்பின் ஞாயிற்றுக் கிழமை வந்தவுடன், அவர்கள் அந்த சிறிய அம்மாளை அங்கே இருந்த சபைக்கு கொண்டுசென்றார்கள், அவளுடைய சிறிய உடை இவ்விதமாக கழுத்துவரைக்கும் மூடப்பட்டதாயும், கைவரைக்கும் நீண்டு இருந்தது. அவள் உள்ளே வந்தவுடன், உதவியாளர்கள் உடனடியாக ஏதோ சொல்ல வந்தது போல் வந்து, 'நல்லது, இந்த நீண்டஉடையை எங்கே வாங்கினீர்கள்? எந்த பழைய பொருட்கள் விற்கும் கடையிலிருந்து இதை வாங்கி வந்தீர்கள்“, என்றார்கள். அவளோ அங்கே உள்ளே சென்றாள், அவளுடைய சிறிய தலைமயிர் அவள் தலைக்கு பின்னாக வாரப்பட்டிருந்தது மற்றும் அவளுடைய முகமும் தோலுரிக்கப்பட்ட வெங்காயத்தை போல் வழவழப்பாக இருந்தது. அவள் அங்கே உள்ளே நடந்து சென்று உட்கார்ந்தாள். 36உங்களுக்கு தெரியும், ப்ளாக் டெயில் கோட் (Flock tail coat - இவ்வகை மேற்சட்டையின் முன் பக்கம் இடுப்புவரையும், பின்பக்கம் அதைவிட நீண்டும் வால் போல் காணப்பட்டும்இருக்கும்) அணிந்த அங்கிருந்த ஊழியக்காரர் எழும்பினார், அவருடைய கழுத்து பட்டை முழுவதும் சுற்றப்பட்டதாயிருந்தது.அவர் அங்கே வந்து, 'இப்பொழுது, என் அன்பான சபையாரே, இப்பொழுது நாம் ஆராதனைக்குள் கடந்துபோவோம்“, என்றார். அதற்கு அந்த சிறிய சீமாட்டி, 'நல்லது, மகிமை“, என்றாள். உடனே அங்கிருந்தஒவ்வொருவரும் ஒரு கூட்ட கனடா நாட்டு பெரியவகை ஆண் வாத்தைப் போல் கழுத்தை நீட்டிசுற்றும் முற்றும் பார்த்து, என்னதான் நடந்தது என்று அவர்கள்திரும்பிப் பார்த்தார்கள். என்னதான் நடந்தது என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அந்த ஊழியக்காரர், 'நான் மறுபடியும் முயற்சி செய்யட்டும். நல்லது, இப்பொழுது, சீமாட்டிகளே, கனவான்களே இன்றைக்கு நம் மத்தியில் இயேசு கிறிஸ்து மகத்தான ஒருவராயிருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம்“, என்றார். அதற்கு அந்த அம்மாள், நல்லது, கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக, ஆமென்,“என்றாள். அவளுடைய மகனும், மருமகளும் அங்கே தலை குணிந்தவாறு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அங்கிருந்த உதவிக்காரர் ஓடிவந்து, 'அம்மையீர், நீங்கள் ஊழியக்காரரை குறுக்கிட்டு தடைசெய்கிறீர்கள். அவரால் பிரசங்கிக்கவே முடியவில்லை“, என்றார். 37நிச்சயமாகவே அவருக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள், 'ஆமென்“ என்று சத்தமிடவில்லையென்றால் என்னால் பிரசங்கிக்க முடியாது. அந்த ஒரு காரியம்தான் எனக்கு தெரியும். நான் எங்கே நிற்கிறேன் எனக்கு தெரியவில்லை. 'ஆமென்” என்றால், 'அப்படியே ஆகக்கடவது“, அப்படி சொல்வதை நான் கேட்க விரும்புகிறேன். அது வார்த்தை தன் பிடிப்பை எடுத்துக் கொண்டு, இருதயத்தினுள் செல்லுகிறதாயிருக்கிறது. ஒரு வேளை அவளுடைய பெயர், 'யார்,யார்?” (who's who?) என்ற செல்வாக்கும், பிரபலாமானவர்கள் பெயர்கள் அடங்கிய விவரப்புத்தகத்தில் பூமியில் பிரபலமானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். உலகத்தில் உள்ள 'யார், யார்?“(who's who) என்ற விவர புத்தகத்தில் என் பெயர் இருப்பதை காட்டிலும்ஆட்டிகுட்டியானவருடைய ஜீவபுத்தகத்தில் என் பெயர் இருப்பதையே நான் விரும்புகிறேன்.அது சரிதான். ஆம், ஆட்டுகுட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் என் பெயர் இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆம், அந்த இடத்தில்தான் அது இருக்க வேண்டும். 38சில நாட்களுக்கு முன் நான் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்தபோது, எனக்கு முன்பாக ஒரு காட்சி தோன்றியது. அது என்னை சிலிர்கக் வைத்தது. முதலில், நான் ஒரு வயதான பழுப்பு நிறமுள்ள கரடியை, குதிரைமேல் துரத்தி கொண்டிருந்தேன். அதினுடைய படத்தை நான் எடுக்கக்கூடாது என்று அந்த வயதான கரடியும் தீவிரமாயிருந்தது. ஆனால் என்னால் முடியும் என்று நான் நினைத்தேன். இருப்பினும் என்னால் அதை நெருங்கிபோக முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து, ஓ, கிட்டத்தட்ட மூன்று வயது குதிரை, அது அடிப்பட்டிருந்தது, அது என்னை தூக்கி எறிய வேண்டுமென்று முடிந்தவரை முயற்சித்தது. இந்த வயதான கரடியை நான் தவிர்க்க முயற்சி செய்து, செங்குத்தான பக்கங்களை கொண்ட சிறிய, குறுகலான பள்ளத்தாக்குகள் வழியாக நாங்கள் சென்றோம். நான் திரும்பி பார்த்து, அதை என்னால் பார்க்க முடியாது என்று நினைத்தேன், ஆனால் என்னால் அதை பார்க்க முடிந்தது. எனவே நான் திரும்பி பார்த்தபோது, அங்கே இரவு வந்து கொண்டிருந்தது. நான் குன்றின் உச்சிக்கு சென்று, சுற்றும் முற்றும் பார்த்து. எந்த வழியாக நான் வந்தேன், என்று யோசித்தேன். எனவே, உங்களுக்கு தெரியும், அங்கே மேலே நீங்கள் திரும்பி தொடர்ந்து போக விரும்பமாட்டீர்கள், காரணம் நீங்கள் ஐநூறு மைல்களுக்கு அப்பால் சாலையோ அல்லது வேறெதுவும் இல்லாத இடத்திற்கு சென்று விடுவீர்கள். அங்கே ஒரு விதமாக மேக மூட்டமாயும், கொஞ்சம் பனி மூட்டமாயும் இருந்தது, ஆகவே தான் நான் அந்த வயதான கரடியினிடத்தில் நெருங்கி சென்று படம் எடுக்க இருந்தேன். நான் சுற்றிப்பார்த்து, 'சரி, நிச்சயமாக இதுதான் சரியான திசை“, என்று நினைத்தேன். கொஞ்ச தூரம் சவாரி செய்தபின், பனி மூட்டம் விலகி, நிலவு காட்சிக்கு வந்தது. 'சரி,நான் உண்மையிலேயே சரியாக திரும்பி சவாரி செய்யத்தக்கதாக என்னால் என் வழியை பார்க்க முடிகிறது. நிலைமை இன்னுமாக மோசமாகி கொண்டே போனது, எனவே நான் நெருப்பை மூட்டி, இந்த இரவை இங்கே கழிக்கட்டும்”, என்று நினைத்தேன். 39எனவே கொஞ்ச தூரம் கடந்து போனபின், என்னுடைய சிறிய குதிரைக்கு உண்மையிலேயே வாயில் நுரைதள்ளியது. காற்றினால் அடித்து கீழே வீசப்பட்ட, தெளிவாக சொல்லப்போனால், கீழே தள்ளப்பட்டு எரிந்து போன மரங்களிடத்தில் வந்து, அதை (குதிரையை) கட்டிப் போட்டேன். உண்மையிலே பலத்த காற்று வீசி மரங்களை கீழே தள்ளின ஒரு இடம்மாக அது இருந்தது, காரணம் மரங்கள் எரிந்து போனபின் அவைகளில் இருந்து ஜீவன் போய் விடும், மேலும் அநேக மரங்கள் காற்று வீசினதால் ஒன்றின் மேல் ஒன்று கவிழ்ந்திருந்தன. அதன் பிறகு நான் அங்கே நின்று,அதை ஓய்வெடுக்கும்படி விட்டுவிட்டேன். குதிரையில் இருந்து இறங்கினபின்,அங்கே சற்று நான் கீழே உட்கார்ந்தேன், பெரிய, வெள்ளை மேகங்கள், அவை கடந்து போய்க் கொண்டிருந்தபோது, அதினூடாக நிலவும் வெளிச்சத்தை பிரகாசித்துக் கொண்டிருந்தது, அதை நான் 'கடையப்பட்ட மோர் போன்று பல அம்சத்தில் காணப்படும் மேக கூட்டம்“ என்று நான் அழைப்பதுண்டு. 'நல்லது, இது நான் நிற்கக்கூடிய ஒரு நல்ல இடம்“ என்று நினைத்தேன். காற்று வீசிக்கொண்டிருந்தது, அது பனி மூட்டத்தையும் அடித்து சென்றது. அதன் பின் நான் கேட்டதிலேயே மிகவும் பயங்கரமான முனகலின் சத்தத்தை கேட்டேன். நான்,' அது என்ன சத்தமாயிருக்கும்”,என்று எண்ணினேன். மறுபடியும் அதே சத்தத்தை கேட்டேன். (சகோ. பிரான்ஹாம் அதை விவரித்துகாண்பிக்கிறார்) 'ம்-ம்-ம்-ம்“. 'இது ஆவிகள் உலாவும் ஒரு திகிலான இடம்”, என்று எண்ணினேன். அதன் பிறகு உடனே, நிலவு மேகத்திற்கு பின்னிருந்து வெளியே வந்தது, அந்த பிரமாண்டான, பெரிய பழமையான, மரித்து போன, ஊசி இலை வகை மரங்கள், நிலவு ஒளியில் வெள்ளை வெளேர்றென்று அங்கே நின்று கொண்டிருந்தன. நிலவு அவைகள் மீது பிரகாசித்துக் கொண்டிருந்ததினால், அவை கல்லறை கற்கள் போல் காணப்பட்டன. அது தாமே நான் கேட்டதிலேயே மிகவும் பயங்கரமான சத்தமாயிருந்தது. 'நான் வந்தது எப்பேற்ப்பட்ட இடமாயிருக்கிறது“. 'தேவனே,நான் இங்கே தங்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரா” என்று நினைத்தேன். 40என்னுடைய சிறிய குதிரை கட்டப்பட்டிருந்தது. நான் அங்கே உட்கார்ந்து, ஆச்சரியப்பட துவங்கினேன். 'எது, இந்த பழமையான மரங்களை, துயரமான சத்தத்தை எழுப்பசெய்து, இவ்வழியாக கடந்து போகிற நபரை திகிலடைய செய்கிறது?“ என்று நினைத்தேன். என்னே‚ இவ்வழியாக கடந்து போகிற எந்த ஒரு நபரும் பயப்படுவான். அங்கே கொஞ்ச நேரம் நான் உட்கார்ந்து, இம்மாதிரி சிறிய பழமையான காட்சி நிகழ்வதை பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து நான் கவனித்தபோது, இதோ மறுபடியும் காற்று இரைச்சலிட்டு கொண்டு வீசத் தொடங்கியது. அந்த வயதான மரங்கள் துயரத்தினாலும்,வேதனையினாலும் முனங்கி கொண்டிருந்தன. சரி, இதற்கு என்னதான் அர்த்தமாயிருக்கும் என்று நினைத்தேன். யோவேல் புத்தகத்தில் உள்ள ஒரு சிறிய வேதவசனம் என் நினைவுக்குவந்தது. 'பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளிவிட்டதை பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது”, இந்த எல்லா சிறிய பூச்சிகள். அதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், அந்த ஒவ்வொரு பூச்சிகளும் ஒரே பூச்சிதான், ஆனால் அது வெவ்வேறு காலகட்டத்தில் இருந்தது. அது ஒரு பூச்சியாக கடந்து போய் மறுபடியும் அது வேறொரு பூச்சியாக திரும்பி வருகிறது. பச்சைப்புழு, வெட்டுக்கிளி, முசுக்கட்டைப்பூச்சி இவையாவும் ஒரே பூச்சிதான், இருப்பினும், அது அதினுடைய வெவ்வேறு ஜீவிய காலகட்டத்தை காண்பிக்கிறது. 41'ஆம், அது சரிதான். சரி, அப்படியென்றால் ஏன் தேவன் என்னை இங்கே நிறுத்தினார் என்று நான் பார்க்கட்டும்“, என்று நினைத்தேன். இந்த பெரிய, பழமையான மரங்கள் யாவும் ஒருவிசை அசலான மரங்களாயிருந்தன. உங்களுக்குத் தெரியும், அது இங்கிருக்கிற சில பிரமாண்டமான, பெரிய விறைத்து போன, சபையை எனக்கு நினைவுக்கு கொண்டு வருகிறது. அவை மிகவும் உயரமாக அங்கே நின்று கொண்டிருந்தன. ஓ, என்னே, அவர்கள் கூரான சிகரத்தை கட்டி, என்னே‚ பட்டணம் முழுவதும் அது காணப்படத்தக்கதாக அவ்வளவு உயரமாயும், அதே சமயத்தில் அது அந்த மரித்துபோன மரத்தை போலவும் இருந்தது. ஓ, நிச்சயமாக அவையாவும் ஒருவிசை அசலான மரங்களாயிருந்தன. அவையாவும் ஒரு விசை லூத்தரன், மெத்தொடிஸ்ட் இன்னும் அது போன்ற காலத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தன. ஆனால் லூத்தரன்கள் விட்டு சென்றதை, மெத்தொடிஸ்டுகள் தின்றன; மெத்தொடிஸ்டுகள் விட்டதை பாப்டிஸ்டுகள் தின்றன; பாப்டிஸ்டுகள் விட்டதை பெந்தெகொஸ்துகள் தின்றன. ஓ, அந்த பரிதாபமான மரமானது தின்று போடப்பட்டதாயிருந்தது. அதைப்பற்றி சொல்ல வேண்டியது எல்லாம் அவ்வளவுதான். 42துவக்கத்தில் தேவனுடைய சுதந்திரவிதமான, அவருடைய மரமாகிய அவருடைய திராட்சை செடி அது ஒரு புதிய சபையாய், ஐக்கியத்தையும், அன்பையும் அங்கே கொண்டிருந்தது. அவர்களுக்கு வேதாகம உபதேசம் இருந்தது. அவர்களுக்கு அங்கே யாவும் சரியாய் இருந்தது. அதன்பிறகு அங்கே ஒரு பூச்சிஅதை தின்றுபோட வந்தது. பின்னர் இன்னொரு பூச்சி தின்று போட வந்து, கடைசியில் அது ஒன்றுமில்லாமற் போய், வெறுமனே ஒரு பிரமாண்டமான, பெரிய, பழமையான, வெறுமையான, ஆவிகள் உலாவும் திகிலான (spooky-looking) இடமாக அது மாறிப்போனது. அதுசரிதான். பின்னர், ஒவ்வொரு தடவையும் காற்று வீசினபோது அவை துயரமாக முனங்கினது. 'அது சரிதான். ஒவ்வொரு முறையும் தேவன் பெந்தெகொஸ்தே அனுபவத்தை திரும்பி கொண்டு வந்த போது, இந்த பெரிய, பழமையான சவக்கிடங்குகள் செய்த ஒரே ஒரு காரியம் என்னவெனில் அது அங்கே நின்று, ம்-ம்-ம்-ம்- அற்புதத்தின் நாட்கள் கடந்து போய்விட்டது, ம்-ம்-ம்-ம்- அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை, என்று முணங்கின“. மேலும் அது ஆவிகள் உலாவும் அளவுக்கு மக்களை அங்கிருந்து விரட்டுகிற திகிலை கொண்டு வருகிற இடமாய் இருக்கிறது, என்று நான் கூறினேன். 43'நல்லது, பின்னர், ஏன் நீர் காற்றை அனுப்பினீர், தேவனே? அதை ஏன் நீர் அனுப்பினீர்?“ என்று நான்எண்ணினேன். அவர்கள் அவ்வளவுதான்; அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது; அவர்கள் அதை ஒரு போதும் பெற்றுக் கொள்ளமாட்டார்கள். காய்ந்து, இறுகிப்போன அந்த பழைய மாட்டு தோலைபோல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது சொல்ல முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் அவர்கள் அதை விசுவாசிக்க போவதில்லை. அவர்கள் இறுகி, மரத்துப்போய், காய்ந்து போய் விட்டார்கள், அவ்வளவுதான். ஆனால், 'பின்னர் ஏன் நீர் காற்றை அனுப்பினீர்”, என்று எண்ணினேன். எனவே, அதன் பின்னர் யோவேல் புத்தகத்தில்சொல்லப்பட்ட, 'ஆனாலும், வெட்டுக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்கு திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் கூறினதை“, நினைவு கூர்ந்தேன். 'அது எங்கே ஆண்டவரே“, என்று நினைத்தேன். அதன் பிறகு நான் கவனித்த போது, இந்த மரங்களின் அடிப்பகுதியிலிருந்து ஒரு கூட்ட புதர்கள், அதாவது ஒரு சிறு கூட்ட செடிகள் வளரத் தொடங்கின. அவை பச்சையாயிருந்தன, அது உண்மை. ஒரு வேளை சபை ஒரு சிறிய பச்சையான செடியை போல் நடந்து கொள்ளலாம். ஆனால், சகோதரனே, அது தேவனுடைய காற்று வீசும்போது அதற்கு வளைந்துகொடுக்கிறதாயிருக்கிறது. ஒவ்வொரு முறை காற்று வீசும்போது அந்த சிறிய செடிகள் சிரித்து கொண்டும், குதித்துக் கொண்டும், களிகூர்ந்தன. நான், 'பையனே,அது பழையமாதிரியான பெந்தெகொஸ்தே கூட்டத்தைப்போல் இல்லையா,அப்படிப்பட்டஒன்றை நான் பார்த்தேயில்லை.” அது சரிதான். சரி. நிச்சயமாக. 44ஓ, அந்த சிறிய செடிகள், காற்று வீசினபோது, அவைகள் வளைந்து கொடுக்கிறதாய் இருந்தன. அவைகள், 'நான் அந்த கூட்டத்துக்கு போகமாட்டேன். நான் பிரிஸ்பிடேரியன். நான் (தேவனுடைய) ஐக்கியத்தை சேர்ந்தவன் (Assemblies of God). ஓ, என்னால் அவர்களோடு ஒத்துபோக முடியவே முடியாது“, என்று சொல்லும். பழைய இறுமாப்பான, விறைத்துபோன, பாதி செத்தவர்களே... உங்களுக்கு என்னதான் நிகழ்ந்தது? இன்று நமக்கு எது தேவையென்றால் நம்மை சீர் செய்ய கூடிய அசலான பெந்தெகொஸ்தே அனுபவம், ஜீவனுள்ள தேவனுடைய சபைகளில் திரும்ப அளிக்கப்பட வேண்டும். 'தேவனே,அதை நீர் செய்வீரா?” என்று நினைத்தேன். நான் அந்த சிறிய அலசடிப்படுகிற கூட்டத்தை பார்த்தேன் அல்லது (சமுதாயத்திலிருந்து) நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது வேறு எதுவோ, உங்களுக்கு தெரியும், அப்படித்தான் நம்மை அவர்கள் அழைப்பார்கள். 'சரி,அவை பச்சையாக இருக்கிறதே“, என்று நீங்கள் கூறலாம். அவை பச்சையாக இருக்கலாம், ஆனால் அவை காற்று அடிக்கும் போது வளைந்து கொடுக்கிறது. அவை வளைந்து கொடுக்கலாம், ஆனால் அதன் பின்னர் எப்படியோ அவை ஜீவனை உடையதாக இருக்கிறது. அது ஒரு நல்ல காரியமாய் இருக்கிறது. 'அப்படியானால் நீர் அதை ஏன் அவ்வளவு கடினமாக அசைக்க வேண்டும்“, என்று நினைத்தேன். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு மரத்தை அசைப்பீர்களானால், அதை சுற்றிலும் இருக்கிற அதினுடைய வேர்கள் தளர்ந்து கொடுத்து மேலும் ஆழமாக சென்று, வேரூன்றி பற்றி பிடித்துக் கொள்ளும். அதேபோல் ஒவ்வொரு முறையும் நாம் நம்முடைய இருதயத்தை திறந்துகொடுத்து, பரிசுத்த ஆவி உள்ளே வர இடம் கொடுப்போமானால், அது தாமே வேர்களை மேலும் அசையச் செய்து, அதன் மூலம் நாம் மேலும் வேரூன்றி, கிறிஸ்து இயேசுவுக்குள் மேலும் ஸ்திரப்பட செய்யும். அசைக்கப்படாத கன்மலைமேல் நங்கூரமிடப்பட்டு, முடிவாக இரட்சகரின் அன்பில் பாதுகாப்பாக ஸ்திரப்பட்டிருக்கிறோம். 45சபைக்கு இன்று எது தேவையென்றால், தன்னை திறந்து கொடுத்து, பச்சையாக மாற (ஜீவனைப் பெற்றுக் கொள்ள) வேண்டும். 'நான் டாக்டர் Ph.D பட்டம் பெற்றவன். என்னுடைய மேய்ப்பர் ஒரு...“ என்றெல்லாம் நீங்கள் கூற முயற்சிக்க வேண்டாம். எப்படியோ, அதற்கு அர்த்தம் தான் என்ன? வேதாகமத்தில் D.D என்றால் '(Dumb Dog) ஊமை நாய்” என்று அர்த்தம். அது அன்றிலிருந்து இன்று வரைக்கும் மாறாமல் அதே விதமாகத்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அது சரிதான். சகோதரனே, நமக்கு D.D. அவசியமில்லை. நமக்கு ஜீவனுள்ள தேவனுடைய சபையில் பரிசுத்த ஆவியின் அனுபவம் தான் அவசியம். அது உண்மை என்று உங்களுக்கு தெரியும். நாம் ஜீவனைப் பெற்றுக் கொண்டு, உயிரடைய வேண்டும். அந்த ஜீவன் உங்களை உயிருள்ளவனாக இருக்கும்படி செய்யுமானால், நீங்கள் தொடர்ந்து முன்னோக்கி சென்று அந்த ஜீவனை பெற்றுக்கொள்ளுங்கள். அது சரிதான். இந்த ஜீவபாதை துண்டிக்கப்படவில்லை. வெட்டுக்கிளிகள் அதை பட்சிக்கவில்லை. ஓ, சகோதரனே, வரப்போகிற நாட்கள் ஒன்றில் தேவன் அவருடைய பூச்சி மருந்தை எடுத்துக் கொண்டு கீழே வந்து, வெட்டிய பின் மீதம் இருக்கும் அடி மரத்துண்டின் மேல் அதை தெளிக்கப்போகிறார். உலகம் வளர்வது போல் அவளும் அவ்வளவு நிச்சயமாக வளரப்போகிறாள், அதை அவள் செய்யப்போகிறாள். ஆம் ஐயா. முசுக்கட்டைப் பூச்சி, வெட்டுக்கிளிகள் பட்சித்து போட்ட வருஷங்களை தேவன் திரும்ப அளிப்பார். 46இப்பொழுது, பெந்தெகொஸ்து நாள் அன்று செம்மறியாட்டு தோலினால் ஆன நூற்று இருபது துருத்திகள் அங்கே இருந்தன. அது சரிதான்.அது வெள்ளாடு தோல் இல்லை, ஆனால் செம்மறியாட்டு தோல், அதுதான் சிறப்பானதாக்கியது. ஆம் ஐயா, அந்த புதிய துருத்திகள் மேலறையில் வைக்கப்பட்டன, அவையாவும் தங்களை விட்டுக் கொடுத்து, வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய வலியில் இருந்தன. மேலும் தேவன் அவர்களுக்கு பொழியப் போகிற ஒவ்வொன்றையும் பிடித்துக்கொள்ளத்தக்கதாக தங்களுடைய இருதயத்தை அவை திறந்து கொடுத்திருந்தது. ஆம் ஐயா. இன்றைக்கு நாமோ 'நான் அங்கே போவேன், ஆனால் நான் என்ன செய்வேன் என்று சொல்லட்டுமா, நான் அதை விசுவாசிக்கமாட்டேன். எவ்வளவுதான் அவர் வேதாகமத்திலிருந்து எடுத்து அதை தெளிவுபடுத்தினாலும் நான் அதை விசுவாசிக்கவே மாட்டேன்“, என்று சொல்வோம். சரி, எது எப்படியோ பழைய மாட்டுத் தோலும், வெள்ளாட்டு தோலுமாகிய உங்களுக்கு, என்னதான் ஆனது? 47நாம் கிரியை செய்வதற்க்கு ஏதோ காரியம் அவசியமாயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய தொடங்குவதற்கு முன், அவர் செய்ய வேண்டிய ஏதோ காரியம் இருக்கிறது. உங்களுக்கு அதுசரி என்று தெரியும். ஓ, நாம் ஜீவிக்கிற இந்த பரிசேய காலம், அது: 'நான் உங்களுக்கு சொல்கிறேன், ஓ, இந்த ஏழாவது படித்த ஒன்றுக்கு முதவாதவன் எனக்கு பிரசங்கிப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். நான் இன்ன-இன்ன இடத்திலிருந்துவந்திருக்கிறேன்; நான் கல்லூரியில் படித்திருக்கிறேன்“, என்று சொல்லும். ஆனால் அதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்கிற போதிய ஞானம் உங்களிடத்தில் இல்லாமலிருக்கலாம். சகோதரனே, அது முற்றிலும் வேறுபட்ட அர்த்தமாயிருக்கலாம். நான் உங்களுக்கு சொல்லுகிறேன், பவுலுக்கும் அப்படிப்பட்ட ஒன்று இருந்தது, ஆனால் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும்படிக்கு அவன் தான் கற்றுக் கொண்டதை புறக்கணித்தான். ஆனால் அதை செய்யகூடாதபடிக்கு இருக்கும் தொல்லை என்னவெனில், நாம் மறுபடியும் நிரப்பப்படும்படிக்கு நம்மிடத்திலிருக்கும் தேவையில்லாத யாவற்றையும் வெளியே கொட்ட வேண்டும், அதுதான் சபைக்கு இன்று அவசியமாயிருக்கிறது. இங்கே அந்த நூற்று இருபது புதிய துருத்திகள் மேலறையில் இருந்தன. அப்பொழுது திடீரென்று பரலோகத்திலிருந்து புதிய திராட்சை மது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல கீழே இறங்கி வந்தது. அங்கிருந்த அந்த சிறிய புது துருத்திகள் வளர்ச்சியினால் ஏற்படுகிற வலியை பெற்றுக் கொள்ளும் வரைக்கும் அது அவர்களை நிரப்பியது, அதன்பிறகு அவர்கள் அங்கிருந்துதுள்ளிக் குதித்து தேசம் முழுவதும் போய் 'இதுதான் அது“ என்றார்கள். சகோதரனே, இது அதுவாக இல்லாத பட்சத்தில், அது வரும் வரைக்கும் நான் காத்துக் கொண்டிருப்பேன். அந்த ஒரு காரியம் தான் நிச்சயமானது. 48இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாய் வந்த இந்த ஆச்சரியமான, மேம்பட்ட பரிசுத்த ஆவியின் அனுபவம், அது அதே நபர். அவரே நமக்குள்ளாகவும், நம்மூலமாயும் எல்லாவகையிலும் கிரியை செய்கிறதாயிருக்கிறது, ஆகவே அது எப்பேற்பட்ட காரியம்; அது எப்பேற்பட்ட ஒரு அருமையான காரியம். அதற்குள் ஜீவன் இருக்கிறது. ஜீவனுள்ள தேவனுடைய சபை, அது முழுவதும் ஜீவனால் நிரப்பப்பட்டிருக்கிறது. அது புளிப்பில்லாத மதுவாயிருக்கிறது. அதில் இன்னுமாக அந்த ஜீவ அணு அதை நிரப்பி, வளரச் செய்து, தள்ளிக் கொண்டும், நெருக்கிக் கொண்டும் இருக்கிறது. அதைதான், கிறிஸ்துவினுடைய அனுபவத்தை தேவன் அதற்க்கு செய்து கொண்டிருக்கிறார். 49நான் வனவிலங்கு மேற்பார்வையாளராக இருந்தபோது, என் ஜீவியத்தில் நான் பார்த்ததிலேயே மிகவும் சந்தோஷமான ஊற்று என்று எண்ணியிருந்த ஒரு சிறிய இடத்திற்கு நான் செல்வது வழக்கம். ஏனெனில் அந்த சிறிய ஊற்று எந்நேரமும் பொங்கிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருந்தது. எனவே ஒரு நாள் நான் அவ்வழியாக கடந்து சென்றபோது அங்கு உட்கார்ந்தபடி, 'சிறிய ஊற்றே, உன்னை இவ்வளவு சந்தோஷமாக வைப்பது எது? ஏன் நீ எப்பொழுதும் பொங்கிக் கொண்டும், குதித்துக் கொண்டும் இருக்கிறாய்?“ 'ஒரு வேளை மான்கள் உன்னிடத்தில் தண்ணீர் குடிப்பதாலேயோ”, என்றேன். அது தன்னால் திரும்பி பேச முடியுமானால், அது, 'இல்லை,சகோதரன் பிரான்ஹாம், ம் ஹூம் “ என்று சொல்லும். நான், 'ஒருவேளை கரடிகள் உன்னிடத்தில் வந்து தண்ணீர் குடிப்பதால், உன்னை அது சந்தோஷமாக வைக்கிறது”, என்று கூறுவேன். அது, 'இல்லை,சகோதரன்பிரான்ஹாம், அது கிடையாது“, என்று சொல்லும். நான், 'சரி,ஒருவேளை நான்உன்னிடத்தில் தண்ணீர் குடிப்பதினால் இருக்கலாம்“, என்றேன். அது, 'இல்லை,அதுவும் இல்லை“, என்று சொல்லும். 'சரி, அப்படியானால் எது உன்னை துள்ளிக்குதிக்கச் செய்கிறது?“ அது தாமே தன்னால் திரும்பி பேச கூடுமானால், 'சகோதரன் பிரான்ஹாம், துள்ளிக் குதிப்பது நான் அல்ல. எனக்கு பின்னாக இருக்கிற ஏதோ ஒன்று என்னை தள்ளிக் கொண்டும், துள்ளிக் குதிக்கவும் செய்கிறது“, என்று சொல்லும். அப்படித்தான் மறுபடியும் பிறந்த ஒவ்வொரு குமாரனிடத்திலும், குமாரத்தியினிடத்திலும் காரியம் இருக்கிறது. அது உங்களுடைய உணர்ச்சிவசப்படுதல் இல்லை, உங்களுக்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று உங்களை தள்ளிக் கொண்டும், உங்களை துள்ளிக் குதிக்கவும் செய்கிறது. அது சரி. உண்மை. 50ஆம். புதிய பிறப்பின் அனுபவங்கள் அதுதான் இன்றைக்கு நமக்கு தேவையாயிருக்கிறது. இப்பொழுது, எசேக்கியல் அதை கொண்டு வந்த விதானத்தை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று இருக்கிறேன். அவன்,'நான் உங்களுக்கு புதிதான இருதயத்தை கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைப்பேன்“, என்றான். அங்கே மூன்று காரியங்கள் இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு புதிய இருதயம். 'நான் அந்த கல்லான இருதயத்தை எடுத்துப் போடுவேன்”. அதுதாமே நீங்கள் பெற்றிருந்த பழைய மாறுபட்ட இருதயம். 'நான் உங்களுக்கு ஒரு புதிதான ஆவியை கொடுப்பேன்“. இப்பொழுது அநேக முறை மிகவும் மோசமான தவறு நடக்கிறது, அது என்னவெனில், மக்கள் அநேக முறை அந்த புதிதான ஆவியைதான் பரிசுத்த ஆவி என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது அவ்விதம் இல்லை, அது ஒரு புதிதான ஆவியாயிருக்கிறது. ஏன், உங்களோடும் உங்களுடைய பழைய ஆவியோடும் உங்களால் ஒத்து போக முடியாத பட்சத்தில், பரிசுத்த ஆவியோடு உங்களால் எப்படி ஒத்து போக முடியும்? நீங்கள் அவருடைய ஆவியோடு ஒத்து போகும்படிக்கு தேவன் உங்களுக்கு ஒரு புதிதான ஆவியை கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. 'நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும்படிக்கு உங்களுக்கு ஒரு புதிதான இருதயத்தை, ஒரு சதையான இருதயத்தை கொடுத்து, பின்னர் அந்த இருதயத்தில் ஒரு புதிதான ஆவியை அருளி, அதன்பிறகு அதில் என் ஆவியை வைப்பேன்”. கவனியுங்கள், புதிதான இருதயம், புதிதான ஆவி, மற்றும் என்னுடைய ஆவி, இந்த மூன்று காரியங்களை குறித்து அவன் பேசினான். 51நல்லது, நீங்கள் அந்த புதிதான ஆவியை பெற்றவுடன், நீங்கள் திருடுவதை விட்டுவிடுகிறீர்கள், நீங்கள் பொய் பேசுவதை விட்டுவிடுகிறீர்கள், இன்னும் அது போன்ற அநேக காரியங்களை விட்டுவிடுகிறீர்கள். எனவே, நீங்களும், 'ஓ, அல்லேலூயா, நான் அதை பெற்றுக் கொண்டேன்“, என்கிறீர்கள். கவனியுங்கள் முதல் முறை யாராவது உங்கள் பாதையில் கொஞ்சம் குறுக்கிடும்போது, ஓ இரக்கம் உண்டாவதாக, காரியமே வித்தியாசமாயிருக்கும். நிச்சயமாக. ரவைத் தோட்டாவை சாப்பிட்ட தவளையைப் போல் திடீர் கோபத்தில் பொங்கி எழும்புவீர்கள். ஆனால் நான் உங்களுக்கு சொல்லட்டும், சகோதரனே. அந்தகாரணத்தினால் தான் உங்களால் தேவனுடைய ஆவியை பெற்றுக் கொள்ளமுடியவில்லை. அது உண்மை. 'ஓ, அவன் என் காலை மிதித்துவிட்டான், என்னால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது”, என்று நீங்கள் கூறுகிறீர்கள். சரிதான். அது உனக்குள் நீ எதை பெற்றிருக்கிறாய் என்பதை காட்டுகிறது. அது உண்மை. 'நான் உங்களில் புதிதான ஆவியை வைத்து, அதன் பின் என்னுடைய ஆவியை உங்களுக்குள் வைப்பேன்“. இப்பொழுது, மனிதனின் உணர்ச்சிகள் எழும் மையத்தில் இருதயம் இருக்கிறது. உங்களுடைய இருதயம் உங்களின் மையத்தில் இருக்கிறது. அது மிகவும் சரி. எனவே தேவன் பழைய மனிதனின் மையத்தில் புதிதான இருதயத்தை வைக்கிறார், பின்னர் புதிதான ஆவியை அந்த புதிதான இருதயத்தின் மையத்தில் வைக்கிறார். அதன்பின் தன்னுடைய ஆவியை அந்த புதிதான ஆவியின் மையத்தில் வைக்கிறார். 52இப்பொழுது, இவையாவும் ஒரு புகழ்மிக்க கடிகாரத்தில் உள்ள முக்கிய சுருள்வில் (main spring) போல் இருக்கிறது. கவனியுங்கள்அதில் இங்கே ஒரு சொடுக்கும் (click), அங்கே ஒரு சொடுக்கும் வேலை செய்யும்படி அமைத்திருப்பார்கள். இங்கே அதனுடைய சிறிய சக்கரங்கள் சுழன்று கொண்டிருக்கும். ஆனாலும் இவையாவும் அந்த முக்கிய சுருள்வில்லினால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். சகோதரனே, இன்றைக்கு இருக்கும் தொல்லை என்னவென்றால் நாம் அந்த முக்கிய சுருள்வில்லை விட்டுவிட்டோம். நாம் நம்மை மெதொடிஸ்டுகளாகவும், பாப்டிஸ்டுகளாகவும், பிரிஸ்பிடெரியன்களாகவும் மாற்றிக் கொண்டு, பெரிய சபைகளை கட்டி, 'இங்கே கவனியுங்கள் எவ்வளவு ஒருஅருமையான கடிகாரத்தை நாங்க பெற்றிருக்கிறோம். கவனியுங்கள் அதற்கு எவ்வளவு ஒருஅருமையான கடிகாரமுள் இருக்கிறது. அதனுடைய முகப்பு தோற்றத்தை கவனியுங்கள். ஏனென்றால் அதில் மாணிக்கக்கற்கள், விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன“, என்று கூறுகிறோம். ஆனால் அது சரியான நேரத்தை காண்பிக்காத பட்சத்தில் அது பத்து (வெள்ளி) காசுக்கு கூட செல்லாது. அது சரிதான். இன்றைக்கு காரியமும் அப்படித்தான் இருக்கிறது. நாம் மெத்தொடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரிஸ்பிடெரியன்களையும், மற்றும் பெந்தெகொஸ்துகளையும் உருவாக்க முயற்சி செய்கிறோம். நாம் மிக நேர்த்தியான சபை, சிறந்த மேய்ப்பர், மிக சாமர்த்தியமான மனிதன், இன்னும் எல்லாவற்றையும் பெற முயல்கிறோம். நம்முடைய சபையும் தேவனுடைய வேதாகமத்தின் படி சரியான நேரத்தை காண்பிக்கிறதில்லை. அவருடைய ஆவியை விட்டுவிட்டீர்கள். அதுதான் காரியம். பாருங்கள். 53இயேசு கூறவில்லையா, 'வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல் மூலைக்கு தலைக் கல்லாயிற்று என்று நீங்கள் கேள்வி படவில்லையா? இப்பொழுது, முக்கிய சுருள்வில் உள்ள இந்த கடிகாரம், மேலும், இது தன்னைத்தானே சுற்றிக் கொள்கிற சுருள்வில்லை (Self-winding) கொண்ட கடிகாரம் இல்லை. ஆனால் இது தேவனால் சுற்றப்படுகிற சுருள்வில்லை (God-winding) கொண்ட கடிகாரமாக இருக்கிறது. இந்த கடிகாரத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம், அதை ஒரே ஒருவழியில் மட்டுமே நீங்கள் செய்ய முடியும், எப்படியெனில் உங்களுடைய உணர்ச்சிகள், அதுதான் அந்த கடிகாரத்தின் சுருள்வில்லை சுற்றிக் கொள்ளசெய்கிறது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு, உங்களுடைய உணர்ச்சிகளும் தேவனுடைய வார்த்தையின்படி இருக்கும் போது அதுதான் உங்களை பரிசுத்த ஆவியோடு சுற்றிக் கொள்ள செய்கிறது. அதுதான் அந்த புதிய கடிகாரம். 54இப்பொழுது, உங்களுக்கு தெரியும், எசேக்கியேல் அதை மறுபடியும் பார்த்தான். அவன், இதோ தீர்க்கதரிசிதான், சக்கரத்திற்குள் சக்கரம் ஆகாயத்தில் சுழன்று கொண்டிருப்பதை பார்த்தான். எனவே, ஒரு சக்கரத்தில் முதலில் ரப்பர் டயர்(tire), அடுத்து வட்ட ஓர விளிம்பு (rim), அதற்கடுத்து கம்பிகள் (spokes), கடைசியில் கம்பிகளை பொருத்தும் மையப்பகுதி (hub) இருக்கும். எனவே, லூத்தர், 'விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்“ என்று நீதிமானாக்கப்படுதலை ஆரம்பித்தபோது, அவன் அதைச் சுற்றிலும் ரப்பர் டயரை பொருத்தினான். ஆமாம். சரிதான். இருப்பினும் அது இன்னுமாக முழுமையான சக்கரத்தைப் போல் இல்லை. சரிதான். அதன் பின் பரிசுத்தமாக்கப்படுதலைக் கொண்டு வந்த மெத்தொடிஸ்டுகள் அதனைச் சுற்றிவட்ட ஓர விளிம்பை பொருத்தினார்கள். அதன்பின் பெந்தெகொஸ்துகள் வந்தார்கள். லூத்தர் அல்ல, மெதொடிஸ்டுகள் பரிசுத்தமாகுதலை பிரசங்கித்தார்கள். லூத்தர் நீதிமானாக்கப்படுதலை பிரசங்கித்தார், அது வெளியே இருக்கும் ரப்பர் டயரைப் போன்றது. அதன்பின் இருக்கும் வட்ட ஓர விளிம்பானது மெதொடிஸ்டுகள் போதித்த பரிசுத்தமாக்கப்படுதலைப் போன்றது. அதன்பின் அந்நிய பாஷைகளை பேசின பெந்தெகொஸ்துகள் வந்து அதற்கு அதனை இணைக்கும் கம்பிகளை பொறுத்தினார்கள். 55சரி, சகோதரனே, நான் இதை சொல்லட்டும், சகோதரனே, அது அவைகளை மட்டும் உள்ளடக்கியது இல்லை. அந்த காரணத்தினால் தான் நாமும் அப்படியே சாலையில் முந்தி அடித்துக் கொண்டும், மேலும் கீழும் குதித்துக் கொண்டும்போகிறோம். அதில் வெறுமனே ஒரு இணைக்கும் கம்பி மட்டும் கிடையாது, ஆனால் ஒன்பதுஆவிக்குரிய வரங்களும் அந்த சபையில் உண்டு, ஒன்றல்ல. அவையெல்லாம் சரிதான். ரப்பர்டயர் அது சரிதான்ƒ வட்ட ஓரவிளிம்பு அதுவும் சரிதான்ƒ இணைக்கும் கம்பிகள் அதுவும் சரிதான்ƒ ஆனால் கறுப்பினத்தவன் தர்பூசணியை சாப்பிடுவதைப் போல் „அதில் இன்னும் அதிகமானது இருக்கிறது.… அதைதான் இன்று நான் உங்களுக்கு கூறுகிறேன். அதைக்காட்டிலும் மேலானது அதில் இருக்கிறது. இந்த சக்கரத்தில் ஒன்பது ஆவிக்குரியஇணைக்கும் கம்பிகள் இருக்கிறது. இவையாவும் கம்பிகளை இணைக்கும் மையப் பகுதியில்(ர்ரடி) இணைக்கப்பட்டு சக்கரத்துக்குள் இருக்கும் சக்கரத்தினால் சுற்றப்படுகிறது.ஓ, நான் பக்திபரவசப்படுகிறேன்.நிச்சயமாக. ஆம், சகோதரனே. நல்ல காரியம் என்னவெனில், நாம் அதை என்ன செய்தாலும்,எப்படிசெய்தாலும், நீங்கள் காற்றில்சண்டைபண்ணுகிறவர்களாய் இருக்கிறீர்கள், காரணம் தேவன் அதை ஏற்கனவே, 'நான் திரும்ப அளிப்பேன்“, என்று கூறிவிட்டார். அது இனிவந்தேயாகவேண்டும். எனவே, இவையாவும் கம்பிகளை இணைக்கும் மையத்தைகொண்டுதான் சுற்றுகிறது. அது போல்தான் முக்கிய சுருள்வில்லை கொண்டு முழு கடிகாரமும்இயக்கப்படுகிறது. அந்த முக்கிய சுருள்வில், சரியாக வினாடியை காண்பித்து, ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் துல்லியமாக காத்துகொள்கிறது. 56உங்களுடைய அந்நிய பாஷைகளை பேசும் வரம், அருமையானது தான்ƒ விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்அருமையானதுதான்ƒ பரிசுத்தமாக்கப்படுதல், நல்லதுதான்ƒ அந்நிய பாஷைகள் பேசுதல், அருமையானதுதான், வியாக்கியானம் கொடுத்தல் நல்லதுதான்ƒ தேவனிடத்திலிருந்து வரும் செய்திகள், அதுவும் அருமையானதுதான்ƒ தீர்க்கதரிசனமும், நல்லது... சகோதரனே, ஆனால் அதில் கம்பிகளை இணைக்கும் மையம் (ர்ரடி)இல்லையென்றால், அது எதற்கு பிரயோஜனப்படும்? வெறுமனே உங்களுடைய கம்பிகள் ஒன்றுக்கு ஒன்று கோணல் மாணலாகஇருக்கும். அவைகள் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டுக்கொண்டும், தேவையில்லாமல் சச்சரவு செய்து கொண்டும்ƒ சண்டையிட்டு கொண்டும்ƒ தனிமைப்படுத்திக் கொண்டும், எரிச்சலினால் பல்லை கடித்துக் கொண்டும், ஒன்றுக்கொன்று சேதப்படுத்திக் கொண்டும் இருக்கும். அதுதான்காரியம். நமக்கு முக்கியமான அந்த சுருள்வில் அவசியமாயிருக்கிறது.இந்த சின்னச்சின்ன சுருள்களும், சின்னச்சின்ன இயந்திர கருவிகளும், சுற்றிக் கொள்ளும் சுருள்களும், மணிகாட்டும் அலாரம்களும்,கடிகாரமுகப்புகளும், பெரிய முள்களும், இன்னும் எல்லாமும் இருந்தும்,அதைஇயக்கக்கூடிய ஏதோ முக்கியமான ஒன்று இல்லையென்றால்,இவையெல்லாம்இருந்தும் இது நமக்கு என்ன நன்மையை அளிக்கப்போகிறது. 57பெந்தெகொஸ்து சபை பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டது என்று நான் விசுவாசிக்கிறேன். அதை உரிமை கோருகிற மீதமுள்ள நீங்களும் அதைபெற்றுக் கொண்டீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அந்நிய பாஷைகள்பேசுவது சரி என்று நான் விசுவாசிக்கிறேன். உங்களுடைய தீர்க்கதரிசனங்களும் சரிஎன்று நான் விசுவாசிக்கிறேன். பாப்டிஸ்டாக இருந்தபோதிலும்... நான் உங்களோடுதொடர்ந்து போக விரும்புகிறேன். அதை நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக அதை நான்விசுவாசிக்கிறேன். ஆனால் இங்கே ஒரு காரியம் இருக்கிறது, சகோதரனே. அது சரியான நேரத்தை காண்பிக்கிறதில்லை. அதைத்தான்நான் சொல்ல முயற்சிக்கிறேன். எனவே காரியம் சரியாக இயங்க வேண்டுமானால் அதற்குபரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மனித இருதயத்திற்குள்ளாக வரவேண்டியதாயிருக்கிறது. தேவனுடைய அன்பு, அந்த அன்பு தேவனாயிருக்கிறது. எனவேஇந்த ஒவ்வொரு வரமும் சரியாக அன்பை மையமாக கொண்டுயிருக்கவில்லையென்றால், அது சுயநலமுடையதாயும், அக்கறையற்றதாயும், ஐக்கியத்திலிருந்து விலகியும், தன்னிச்சை யாகவும், மற்றவர்களின் காரியங்களில்குறுக்கிட்டு கொண்டும், குழப்பிக்கொண்டும் இருக்கும். ஆனால் அவை சரியாக அன்பின் மையத்தில் நங்கூரமிடப்பட்டிருக்குமானால், அது ஒவ்வொருவரோடும் ஐக்கியம்கொள்ளும். அது சரிதான். சரியாக அதுதான் நமக்கு அவசியமாயிருக்கிறது. சபையில் அன்புஇல்லாததால் அது மரித்துக் கொண்டிருக்கிறது, சகோதரனே. 58நம்முடைய வரங்கள் எல்லாம் சரிதான். நம்முடைய ஸ்தாபனங்கள்எல்லாம் சரிதான், அவைகளுக்கு எதிராக ஒன்றுமில்லை. ஆனால் நம்முடைய முழு நம்பிக்கையையும் நம்முடைய ஸ்தாபனத்தின் மேல் வைக்கிறோம். உங்களுடைய முழு நம்பிக்கையையும் உங்கள் வரங்கள் மீது வைக்கிறீர்கள். இயேசு கூறின விதமாக, 'அந்நாளில் அநேகர் என்னிடத்தில் வந்து, உம்முடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா, உம்முடைய நாமத்தில் பிசாசுகளை துரத்தவில்லையா, இன்னும் அதிகமான காரியங்கள் செய்யவில்லையா, என்பார்கள். அதற்கு அவர், 'அக்கிரம செய்கைக்காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள். உங்களை அறியேன்“, என்பார். பவுல், 'நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசியிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றும் இல்லை“. நான் வேதாகமத்தை அறிந்திருந்தாலும், Ph.D.D இரண்டு பட்டம் பெற்றிருந்தாலும், தேவனுடைய எல்லா இரகசியங்களையும் நான் அறிந்திருந்தாலும், அதுதாமே தேவனுடைய அன்பாகிய கம்பிகளை இணைக்கும் மையத்தில் (hub) இணைக்கப்படாவிட்டால், அது சரியாக நேரத்தை காட்டாது. கவனியுங்கள். அது சரியாக இயங்கவே இயங்காது. 59நானும் ஒரு டாக்டர் பட்டத்தை பெற்றிருக்கலாமே என்று விரும்பினேன். அன்றொரு நாளில் எனக்கு ஒருவர் டாக்டர் பட்டத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். நான், 'அதை பெற்றுக் கொள்வதற்கு நான் மிகவும் புத்திசாலியாக இருக்கிறேன்“, என்றேன். ஆம் ஐயா. நான், 'என்னுடைய பேச்சு பழைய கென்டக்கிய ஊர் பாஷை பாணியில், ஹிஸ் (hints), ஹைன்ட்ஸ் (haint's), டோட்ஸ், பெட்ச் (fetch), டர்ரி (tarry), என்று தெற்க்கத்திய பேச்சை கொண்டதாக இருக்கும்”, என்றேன். மக்கள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். நான் மாய்மாலக்காரனாக இருக்க விரும்பவில்லை. எனக்கு ஒன்று இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன், ஆனால் அவர்களுடைய நிபந்தனைகளின்படி ஒன்று கூட எனக்கு தேவையில்லை. நிச்சயம், நான் என்னவாக இருக்கிறேனோ அவ்விதத்திலேயே தேவனுக்கு ஊழியம் செய்து, நிச்சயமாகவே மக்களிடத்திலும், தேவனிடத்திலும், உத்தமமாய் இருக்க விரும்புகிறேன். நீங்கள் மக்களிடத்தில் உத்தமமாய் இல்லையென்றால், தேவனிடத்தில் நீங்கள் உத்தமமாய் இருக்க முடியாது. 60நமக்கு தேவனுடைய அன்பு அவசியமாயிருக்கிறது. அதுதான் முழு காரியத்தையும் கட்டுப்படுத்துகிறது. எனவே, உங்களுடைய கடிகாரம் அது நல்லதுதான். உங்களுடைய முக்கியமானதும் மற்றும் அதன் அங்க சுருள்வில்களும் நல்லது தான்.உங்களுடைய சிறிய நொடியைக் காண்பிக்கும் முள், அதுவும் நல்லதுதான்; உங்களுடைய எல்லா சிறிய வரங்களும் இன்னும் ஒவ்வொரு காரியமும் அதுவும் நல்லது தான்.ஆனால், சகோதரனே, நாம் அந்த முக்கியமான சுருள்வில்லை திரும்பவும் பெற்றுக்கொள்வோமாக. ஓ, என்னே. எனவே கவனியுங்கள், அன்பு கிரியை செய்யத் தொடங்கும் போதுதான், அந்த முக்கிய சுருள்வில்லும் கிரியை செய்யத் தொடங்கும். அதன்பின் என்ன நடக்கும் என்று தெரியுமா? மெதொடிஸ்டுகள், 'வாருங்கள், பாப்டிஸ்டுகளே, நாமெல்லாரும் சேர்ந்து நடனமாடுவோம்“ என்பார்கள். அது சரிதான். 'வாருங்கள், பிரிஸ்பிடெரியன்களே, பெந்தெகொஸ்துகளாகிய நீங்களும், எல்லோரும் ஒன்று சேர்ந்து நகரம் தழுவிய எழுப்புதலை பெற்றுக்கொள்வோம்.” அதுதான் காரியம். அதன்பின் அந்த முக்கிய சுருள்வில் கட்டுபாட்டைஎடுத்துக் கொள்ளும். பரிசுத்த ஆவியானவர் அசைவாட துவங்குவார். அதன்பின் பாப்டிஸ்டுகள், நீங்கள் அந்நிய பாஷை பேசுவதினால் உங்களிடத்தில் வம்பு செய்யமாட்டார்கள், நீங்களும் அதில் ஒழுங்கு தவறி போகமாட்டீர்கள். அதன்பின் பிரிஸ்பிடேரியன்கள், பாப்டிஸ்டுகள், லூத்தரன்கள், எல்லோருமாக ஒட்டுமொத்த மகத்தான, பெரிய ஜீவனுள்ள தேவனுடைய சபையாக இயங்குவார்கள். அப்பொழுதுஅவள் வேதாகமத்தின்படி நேரத்தை காட்டுவாள். நிச்சயமாக. ஓ, இக்காலத்தின் அடையாளங்கள். நாம் கடைசிநாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். அவள் இந்த வேதாகமத்தின்படி நேரத்தை காண்பிக்க வேண்டியவளாயிருக்கிறாள். உங்களுக்கு தெரியும், எப்பொழுதாவது ஒரு முறைக்கு அந்த கடிகாரம் காய்ந்து போகுமானால், தேவன் ஒரு சொட்டு எண்ணெய்யை பரலோகத்திலிருந்து உங்களுக்கு இடுவார். அவர் அதற்கு முழுவதும் எண்ணெய் இடுவார், அவளும் அதற்குபின் நன்றாக இயங்கத் தொடங்குவாள். ஆம் ஐயா,அப்படி நீங்கள் செய்யும் போது, அது நன்றாக இயங்கும். 61இப்பொழுது, கவனியுங்கள். ஒரு புதிதான இருதயம், ஒரு புதிதான ஆவி, பின்னர் என் ஆவியை உங்களுக்குள்ளாக வைப்பேன். அதன் பின் நீங்கள் என் கட்டளைகளையும்,என் நியாயங்களையும் கைக்கொள்வீர்கள். முக்கியமான சுருள்வில் இயங்க ஆரம்பித்து, ஆகாதென்று தள்ளப்பட்ட கல்லும், தேவனுடைய அன்பும் தேவனுடைய மக்கள் மத்தியில் திரும்பவும் கொண்டு வரப்படும் போது, அதன் பின் முழு தேவனுடைய சபையும், எந்த ஒரு சண்டை சச்சரவுமின்றி ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்வதை நீங்கள் காண்பீர்கள். இப்பொழுது, வேதாகமத்தில் தேவனுடைய ஊழியர்கள், 'நம்முடைய ஆண்டவர் வர தாமதிக்கிறார்“, என்று கூறினபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அழித்துக் கொண்டும், கடித்துக் கொண்டும், குழப்பிக் கொண்டும், எரிச்சலூட்டிக் கொண்டும் இருந்தனர். அவர்கள் அவ்விதமாய் இருப்பதை கர்த்தர் வந்தபோது அவர்களை கண்டுபிடித்தார். அவர்கள் விளக்கை வைத்திருந்தனர். ஆனால் அவர்களிடத்தில் எண்ணெய் இல்லாமலிருந்தது. பாருங்கள். அவர்கள் அவ்விதமாய் இருந்ததால் காரிருளில் எறியப்பட்டனர். சகோதரனே, அசலானது இங்கே அருகில் இருக்கும்போது, ஏன் மாற்றுப் பொருளை (substitute) எடுத்துக் கொள்கிறாய்? இங்கே அசலான காரியம் அருகில் இருக்கும்போது, ஏன் வேறொன்றை எடுத்துக் கொள்கிறாய்? எனவே தேவனுடைய அன்பாகிய கிறிஸ்துவானவர், அந்த முக்கிய சுருள்வில் உங்களுக்குள், உங்களுடைய இருதயத்திற்குள் கிரியை செய்யும்போது, அது இவ்விதமான „டிக்…என்ற கடிகார ஒலியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், இரக்கம், சாந்தகுணம், விசுவாசம், தயை இவைகளை காண்பிக்க துவங்கும், ஓ, என்னே‚ பின்னர் அது இவைகளை கொண்டு „டிக்… என்ற ஒலியை எழுப்பி சரியான நேரத்தை காண்பித்து கொண்டிருக்கும். 62அதன்பின் நீங்களும் உங்களுக்கு அது என்னவென்று அறிந்துகொள்வீர்கள் நீங்கள் கிறிஸ்துவோடு நுகத்தடியை கொண்டு பூட்டப்பட்டிருக்கும்போது, அது ஒரு போதும் உங்கள் கழுத்தை காயப்படுத்தாது. அதை சுமப்பதற்கு ஒரு பாரமாய் அது இருக்காது. ஏனெனில் அது முழுவதும் சிறகுகளை கொண்டிருக்கும். அது லேசாய் இருக்கும். அதன் பாரங்கள் குறைவாயிருக்கும். அது உங்களுக்கு என்ன செய்யும் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எவராவது ஒருவர் உங்களிடத்தில், 'ஏய், நீ அந்த பரிசுத்த உருளையர் (holy-roller) கூட்டத்துக்கு போகவில்லையா? நீ அங்கே போவதை நான் பார்த்தேன் என்று நினைக்கிறேன்“. 'சரி, ம்-ம்-ம்-ம்-ம், நான் உனக்கு சொல்லட்டும்...”அது உங்களை ஒருவிதமாக கொஞ்சம் புண்படுத்தும், காரணம் அந்த முக்கிய சுருள்வில் இயங்கவில்லை. அது சரிதான். ஆனால் அந்த முக்கிய சுருள்வில் இயங்க தொடங்கி, அந்த நபர் உங்களிடத்தில் வந்து, 'லிட்டி, நீ பரிசுத்த உருளையராக மாறிவிட்டாய் என்று நான் கேள்விப்பட்டேன்“, என்பான். நீங்களும் அந்த முக்கிய சுருள்வில்லை (mainspring) பெற்றிராத போது, நீங்கள் அழுதுகொண்டே, 'ஜான், நான் உனக்கு சொல்லட்டும். நான் அந்த பழைய சிகரெட்டுகளை தூக்கிப் போட்டுவிட்டேன். அது எனக்கு தெரியும். நான் ரேடியோவில் கேட்டேன். எப்படியெனில்...” என்று சொல்வீர்கள். 63அன்றொரு நாளில், 'கடந்த உலக மகா யுத்தத்தில் நான்கு வருடத்தில் மக்கள் மரித்ததைக் காட்டிலும் இந்த வருடத்தில் அமெரிக்காவில், சிகரெட் பிடிப்பதினால் ஏற்படும் தொண்டை புற்றுநோயால் அதிகமானவர்கள் மரிப்பார்கள்,“ என்று நான் கேள்விப்பட்டேன்.இருபக்கங்களிலும் மரித்ததைக் காட்டிலும் அதிகமானோர் அமெரிக்க ஐக்கிய நாட்டில்மரிப்பார்கள். நேற்றைய தினத்தில் வானொலியில் புற்றுநோயை குறித்து சொல்லப்பட்டதைநீங்கள் கேள்விப்பட்டீர்களா? புகைப்பிடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் என்று முற்றிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் அதை ஏன்அவர்கள் நிறுத்தக் கூடாது? என்னதான் காரியம்? தொலைக்காட்சியிலும், இன்னும் மற்றெல்லாவற்றிலும் அப்படிப்பட்ட அருவருப்பான, இழிவான காரியங்கள் நிறைந்திருக்கிறது. ஏனென்றால் அப்படிப்பட்டவைகள் ஒருவகையான பெரிய பருந்துகளுக்கு அது தேவைப்படுகிறது. அது மிகவும் சரிதான். மிகவும் சரி. அப்படிப்பட்ட பருந்து வகையினிடத்தில் எந்த மரித்து போனதையும் குறித்து நீங்கள் பேசமுடியாது, காரணம் அவைகளைத் தான் அது புசிக்கிறது. அது சரிதான். ஒருமுறை அதனுடைய குணத்தை மாற்றிப்பாருங்கள். நிச்சயமாக அது அதை விட்டு விலகி இருக்கும். அது மிகவும் சரி. ஓ, நான் கடினமாக பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நான் கடினமாக இருக்க வேண்டும் என்று இல்லை, நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால், சகோதரனே, நீங்கள் மறுபடியும் வனையப்படுவதற்கு முன், முதலாவது நீங்கள் உடைக்கப்பட வேண்டும். அது மிகவும் சரி. நாம் சத்தியம் என்னவென்பதை அறிந்திருக்க வேண்டும். நான் உங்களுக்கு வேதவசனத்தை மேற்கோள் காட்டுகிறேன். நிச்சயமாக. 64அதன்பின் நீங்கள் அந்த பழைய நுகத்தடியை கொண்டு கிறிஸ்துவோடு பூட்டப்பட்டிருக்கும் போது, தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயத்திலிருந்து, பிரவாகித்து, அந்த முக்கிய சுருள்வில் இயங்கும்போது, யாரோ ஒருவர் உங்களிடத்தில்,'ஏய், நீ இனி குடிப்பதில்லை; நீ இனி புகைப்பதில்லை. நீ ஒருபரிசுத்த உருளையர் என்று நான் கேள்விப்பட்டேன்“, என்பார்கள். நீங்களும், 'அது சரிதான், சகோதரியே. ஓ, நான் அந்த பொக்கிஷத்தை கண்டுபிடித்திருக்கிறேன். அது என் உள்ளத்திற்கு மிக இனிமையாக இருக்கிறது. நானும் அதை உங்களிடத்தில் சொல்லியிருக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன்”, என்பீர்கள். ஓ, ஆமாம், அதுதாமே சிலுவை முழுவதும் இறகுகளை வைக்கிறது. பின்னர் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? உங்கள் மேல் வைக்கப்பட்ட அந்த பாரங்களை, நீங்கள் அதை சுமந்து செல்வீர்கள். எப்படியெனில் சிம்சோன் காசாவின் வெண்கல கதவுகளை சுலபமாக கொண்டு சென்றது போலஇருக்கும். ஏனெனில், அதை அவன் ஒரு மூட்டையை தூக்கிக்கொண்டு செல்வது போல, ஒரு குன்றிற்கு கொண்டு சென்று, அதை அங்கு வைத்தான். எனவே உண்மையிலேயே அந்த முக்கிய சுருள்வில் உன் இருதயத்தில் இயங்கி தேவனுடைய அன்பு உன் இருதயத்திலிருந்து பிரவாகித்து செல்லும்போது, அவர்கள் உன்னை என்னதான் பெயர் வைத்து அழைத்தாலும், மேலும் அப்படி கூறுவதினால் அது அவர்களுக்கு ஒரு சிறு நன்மையும் செய்யாது. அதை நீ கல்வாரி என்னும் பெயர் கொண்ட ஒரு குன்றிற்கு கொண்டு சென்று, பின் அதை அங்கு வைத்து, அந்த நபருக்காக நீ ஜெபிப்பாய். அது சரிதான். அப்படிப்பட்ட மக்களிடத்தில் நீ அதை, இதை அல்லது வேறொன்றை குறித்து சண்டைசச்சரவு செய்து கொண்டு விவாதம் செய்து கொண்டு இருக்கமாட்டாய். 65ஏனெனில், நீ தேவனுடைய பிள்ளையாக மாறும்போது, அந்த பழைய காரியங்கள் ஒழிந்து போகின்றன. நீங்கள் அவரோடு கூட பூட்டப்பட்டிருக்கிறீர்கள், ஓ, தேவனுடைய இராஜ்ஜியத்தின் பிரஜைகளாக பூட்டப்பட்டு, அவரோடு கூட உடன் சுதந்தரவாளிகளாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கும்போது, கிறிஸ்துவின் நுகத்தடியை அவரோடு கூடசுமப்பது எவ்வளவு சந்தோஷமாயிருக்கும். அது இலேசாயிருக்கும். இப்பொழுது, இது, இந்த அன்பு நமக்குள்ளாக வரும்போது, நாம் என்ன செய்வோம்? இங்கே அன்றொரு இரவு, எப்படி அந்த அன்பு வெளிப்படுத்தப்பட்டதென்றும், எப்படி அந்த பாரம் லேசாக காணப்பட்டதென்றும், எப்படி அந்த அன்பு பயத்தை வெளியே தள்ளினது என்று அதை பற்றி பிரசங்கித்தேன் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அந்த அன்பை உங்களுக்குள்ளாக பெற்றிருக்கும் போது நீங்கள் பீதியடையமாட்டீர்கள். 'நீங்கள் தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொள்ளும் போது, நீங்கள் சுகத்தை பெற்றுக் கொள்ள முடியும்“ என்று வேதாகமம் கூறுகிறது. அந்த அன்பு உங்களுக்குள் இருக்குமட்டும், நீங்கள் இந்த எல்லா காரியங்களையும் புறம்பே தள்ளி, ஒன்றிற்கும் கவலைப்படாமல் இருப்பீர்கள். காரியங்கள் சரிவர நடக்கவில்லையென்றாலும், அது ஒரு விஷயமே இல்லை. இன்னும் அந்த அன்பு உங்களிடத்தில் இருக்கிறது. பாருங்கள். அது உங்களை நிலையாக வைக்கிறது. 66அப்போஸ்தலர்கள் இந்த முக்கிய சுருள்வில்லாகிய, அன்பு மூலமாய் வருகிற வல்லமையை காண்பிக்க விரும்பினார்கள். இயேசுவை கவனியுங்கள், அவர் நம்மை கல்லறையண்டைக்கு கொண்டு சென்றார். அங்கே இயேசு கிடத்தப்பட்டிருப்பதை கவனியுங்கள். அவருடைய முகம் சீர்குலைந்து, மரணத்தினால் வெளுத்து போய், எல்லா இரத்தமும் அவருடைய சரீரத்திலிருந்து வெளியேறி, அவருடைய கரங்கள் முழுவதும் ஆணிகளால் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது, அவருடைய பாதங்களும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது. அதோ, அங்கே அவர் மரித்த நிலையில்,உணர்ச்சியற்றவராய் மூன்று நாட்கள் இருந்தார். அதன்பின் கவனியுங்கள். திடீரென்று ஒரு கூட்ட இராணுவ வீரர்கள் பீதியில் உறைந்து போனவர்கள் போல் இங்கும் அங்குமாக ஓடுவதை நான் பார்த்தேன். அது என்ன? அதன் பின் நான் கவனித்தபோது அவருடைய உதட்டின் நிறம் திரும்பி வரத் தொடங்கியது. தேவன் அங்கே எதை செய்து கொண்டு காண்பித்துக் கொண்டிருந்தார், அந்த அன்பின் வல்லமையை அங்கே காண்பித்து கொண்டிருந்தார். அவரை, அவர் உயிரோடே எழுப்பினார். இதோ அவர் அங்கே கல்லறையண்டையில் நின்று கொண்டு, 'எல்லா வல்லமையும், எல்லா புகழும்,“ என்று பாடிக் கொண்டிருந்தார். அவர் போகத் துவங்கிய போது அவரைக் கவனியுங்கள். ஒரு சிலநாட்கள் கழித்து அவர் தன்னுடைய சீஷர்களை கடற்கரையில் கூட்டிச் சேர்த்து, அவர்களிடத்தில் அவர் பிரசங்கம் செய்தார். இங்கே கடைசியாக அவருடைய அழகான உதடுகள் பேசத் தொடங்கி, வார்த்தைகள் புறப்பட்டு வெளி வந்தன, 'நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின் தொடரும்“. 67அவர் பேச ஆரம்பித்தவுடன், விடியற்காலை வெளிச்சம் அவருடைய பாதத்தின் கீழாக வருவதை என்னால் பார்க்க முடிந்தது. என்னதான் காரியம்? தேவன் தன்னுடைய வல்லமையை காண்பித்துக் கொண்டிருந்தார். அவர் மேலே எழும்பிக் கொண்டிருந்தார். அவர் என்னவாயிருக்கிறார்? புவி ஈர்ப்பு விசையின் (gravitation) ஒவ்வொரு விதிக்கும் அடிபணிவதை அவர் நிராகரித்தார். அவர் உயர மேலே உயர்த்தப்பட்டார். அது எப்படி முடியும்? ஏனெனில் அவர்தான் அந்த புவிஈர்ப்பு விசையை சிருஷ்டித்தவர். இதோ அவர் இங்கே இருக்கிறார்.அவர் உன்னதத்திற்கு போகும் வரைக்கும், அவர் உயர ஏறினார். அங்கே உன்னதத்தில் வீற்றிருக்கும் மாட்சிமை பொருந்தியவரின் பாதத்தண்டையில் மெதுவாக சென்று அமர்ந்தார். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. இதோ அவர் பரலோகத்தின் மீதும், பூமியின் மீதும் உள்ள சர்வ வல்லமையை தன் கரத்தில் கொண்டவராய் அங்கே வீற்றிருந்தார். அவருடைய அனுமதியில்லாமல் சமுத்திரத்தின் மேல் ஒரு அலைகூட அசைய முடியாது. அவருடைய வல்லமை அப்பேற்ப்பட்டது. அல்லேலூயா. கிறிஸ்து இயேசுவில் நம்மை புது சிருஷ்டிகளாக மாற்றுவதற்கு அதே வல்லமை நமக்குள் கிரியை செய்து கொண்டிருக்கிறது. ஓ, சகோதரனே, அங்குதான் வல்லமை வருகிறதாயிருக்கிறது, அன்பாகிய நம் விசுவாசம், ஆம் நம்முடைய விசுவாசம் அதை கீழேகொண்டு வரும் போது, தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்ளமாட்டார் என்று நாம் நினைக்கிற அந்த எல்லா பயத்தையும் அது புறம்பே தள்ளிப்போடுகிறது. அன்பும், கிருபையும் கிறிஸ்துதான் என்று நான் கண்ட போது, அதன் பின் அது அவரை கீழே நமக்குள் கொண்டு வருகிறது. அந்த மகத்தான தேவனுடைய வல்லமை சபைக்குள் கிரியை செய்ய துவங்கும்போது, அன்பு ஜெயங் கொள்கிறதாயிருக்கிறது, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், உலகத்தில் மற்ற எதைக் காட்டிலும் அன்பு மிகவும் வல்லமையான ஆயுதமாயிருக்கிறது. அன்பு, அதனுடைய இடத்தை வேறு எதுவும் எடுத்து கொள்ள முடியாது. 68சில நாட்களுக்கு முன் சிறிய பெண் கல்லூரிக்கு சென்று, ஒரு சிறிய பெண்னையும், ஒரு சிறிய நாயையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு திரும்பி வந்தாள். அவள் வர வேண்டிய இடத்தை அடைந்தவுடன், ரெயில் வண்டியிலிருந்து அவள் இறங்கும்போது, அங்கே வெளியே அவளுடைய வயதான தாயாரும் அவளுக்காக நின்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவளுடன் வந்த அந்த சிறிய பெண், 'காண சகிக்க முடியாத தோற்றமும், சோகமும் உள்ள மூதாட்டி யார்?“ என்று கேட்டாள். அந்த பெண்னோ அவமானத்தினால், 'ஓ, எனக்குத் தெரியாது“, என்றாள். அவள் ரெயிலிருந்து இறங்கினவுடன், அவளுடைய சிறிய வயதான தாயார் ஓடி வந்து, 'அன்பே, நான் உன்னைப் பார்த்ததில் சந்தோஷமடைகிறேன்“, என்றாள். அவளோ, தன் முதுகைத் திருப்பிக் கொண்டு சென்றாள். அப்பொழுது அங்கே ரெயில் வண்டி நடத்துனர் நின்று கொண்டிருந்தார். அவர், 'மேரி,நான் உன்னை ஒருகேள்வி கேட்கப்போகிறேன், நீ கல்லூரிக்கு சென்றதிலிருந்து அவ்வளவாக நீ ஏன் மாறிவிட்டாய். உன்னுடைய அறிவுப்பூர்வமான படிப்பால் இதைத்தான் நீ கற்றுக் கொண்டாயா?“ என்றார். 69நம்முடைய எல்லா அறிவுப்பூர்வமான மாற்றுக் காரியங்களில் அன்பிற்க்கு பதிலாக அதைத்தான் கற்றுக் கொண்டோம் என்று நான் அஞ்சுகிறேன். அந்த நடத்துனர் தொடர்ந்து, 'மேரி அது உண்மை“. 'நானும் வயதானவனாகி விட்டேன். இன்றைக்கு உன்னுடைய தாயார் கோரமான தோற்றத்துடன் இருப்பதின் காரணத்தை நான் அறிவேன். உன்னுடைய தாயார் கோரமான தோற்றத்தில் காணப்படுவதற்கு காரணம், ஒரு நாளில் நீ வீட்டின் மேலறையில் இருந்த போது, உன்னுடைய தாயாரும் வீட்டின் கொல்லைப்புறத்தில் துணிகளை காயவைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி அவள் துணிகளை காயவைத்துக் கொண்டிருந்தபோது, வீட்டில் தீ பிடித்தது, யாரோ ஒருவர் ஓடி அதை அவளுக்கு தெரிவித்தார்கள். நீ ஒரு சிறிய அறையில் கொழுந்துவிட்டு எரியும் தீ இடையில் சிக்கிக் கொண்டாய். அங்கிருந்த ஒவ்வொருவரும்,”உள்ளே போகவேண்டாம், உள்ளே போகவேண்டாம்…, என்று கத்தினார்கள். ஆனால் அவளால் வெளியே இருக்க முடியவில்லை. அவள் தான் அணிந்திருந்த ஆடை பாதுகாப்பு உடையை (apron) உதறி தள்ளிவிட்டு, தீ ஜீவாலை ஊடாக சென்று, உன்னைப் பற்றி பிடித்து, தன்னுடைய ஆடையில் உன்னை பாதுகாப்பாக சுற்றி, திரும்பி அதனூடாக வரும்போது அவளுக்கு தீ காயம் ஏற்பட்டு, தழும்புகள் உண்டானது, அதனால்தான் இன்றைக்கு அவள் கோரமாக காணப்படுகிறாள். நீ அழகாய் இருப்பதற்கு காரணம் அவளுடைய அசிங்கமான தோற்றம்தான். நீ அழகாய் இருப்பதற்காக அவள் அசிங்கமான தோற்றத்தை பெற்றுக் கொண்டாள். எனவே உன்னுடைய சொந்த தாயாரை குறித்து நீ வெட்கமடைந்தாய் என்று மறுபடியும் என்னிடத்தில் சொல்ல விரும்புகிறாயா?“, என்றார். 70சகோதரனே, இன்று ஒரு காரியத்தை நாம் எடுத்துக் கொள்வோமானால், அது அறிவுப்பூர்வமான நபர் அல்ல, ஆனால் கிறிஸ்துவை சிலுவைக்கு அனுப்பி, அங்கே வெட்ககேட்டிலும், அவமானத்திலும் மரிக்கும்படி செய்ததற்கு, தேவனுடைய அன்புதான் காரணமாயிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். பெந்தெகொஸ்து சபையோ அல்லது வேறு எந்த சபையோ தேவனுடைய அசலான அன்பை ஏற்க மறுத்துவிடும் என்று நீங்கள் என்னிடத்தில் கூற விரும்புகிறீர்கள். 'இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நிமித்தம் நான் வெட்கமடைய மாட்டேன். இரட்சிக்கப்படுவோர்க்கு அது தேவனுடைய வல்லமையாய் இருக்கிறது“. இன்னும் சரியாக சொல்லப் போனால்,'பரிசுத்த உருளையர்”, என்று நீ அழைப்பாயானால், தேவனுடைய அன்பு என் இருதயத்திற்குள்ளாக இருக்குமட்டும் நாம் அவ்விதமாகவே நடந்து கொள்வேமாக. நிச்சயமாக, அது ஒரு விஷயமே அல்ல. ஓ, சகோதரனே, சபையை கட்டுப்படுத்த தேவனுடைய அன்பாகிய, பரிசுத்த ஆவியை தேவன் கொடுத்திருக்கிறார், புத்திசாலிகளையும், படிப்பறிவுள்ளவர்களையும் அல்ல, ஆனால் அன்பை கொடுத்திருக்கிறார். வரங்கள் சபையில் கிரியைசெய்யும், ஆனால் அது சபையைகட்டுப்படுத்தாது. அன்புதான் சபையை கட்டுப் படுத்தும். 'தேவன் அவ்வளவாய் உலகத்தை அன்பு கூர்ந்ததால்,தன்னுடையஒரேபேறான குமாரனை கொடுத்தார்“. அவருடைய அன்பு அதை செய்யும்படிக்குஅவரை கட்டாயப்படுத்தியது. எனவே அன்பு கட்டாயப்படுத்தும்போது, இராஜாதிபத்திய கிருபை (Sovereign grace) அதன் நபரை முன்னுக்கு கொண்டு வருகிறது. நான் இதைமறுபடியும் கூறட்டும்: தெய்வீக அன்பு முன்னுக்கு வரும்போது, கிருபை அதனுடைய நபரை உற்பத்தி செய்யும். ஏகாதிபதிய கிருபைஒரு இரட்சகரை உலகிற்கு கொண்டு வரும் அளவுக்கு, அவ்வளவாய் தேவன் உலகத்தை அன்புகூர்ந்தார். ஆமாம், நிச்சயமாக. நீங்கள் தேவனை அவ்வளவாய்நேசிக்கும்போது, உன்னை ஜீவிக்க செய்யும்படிக்கும், அன்பு கூற செய்யும் படிக்கும், ஒரு உத்தமமான கிறிஸ்தவனாயிருக்கும்படிக்கும், ஏகாதிபதிய கிருபை உன்னிடத்தில் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை கொண்டுவரும். 71இங்கே ஒரு எண்ணத்தை கூற விரும்புகிறேன். அநேக ஆயிரக்கணக்கானவருடங்களுக்கு முன் இந்த பழைய பூமி ஒரு பெரிய எரிமலை வெடிப்பாய் இருந்ததே அல்லாமல்வேறொன்றுமில்லை, அப்பொழுது அதில் ஒரு சிறிய ஜீவன் கூட இல்லை, எனவே அது எரிமலை வெடிப்பை தவிர அதில் வேறொன்றும்இல்லாதிருந்தது. மகத்தான பரிசுத்த ஆவியாகிய தேவன்,லோகாஸ் (டுழபழள), தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தது. அதை நாம் பரிசுத்த ஆவி என்றுஅழைப்பதுண்டு. அது தேவனிடத்திலிருந்து புறப்பட்டு பூமிக்கு வந்தது. நான் முடிக்கும் தருவாயில் இருக்கும்போது, இப்பொழுது நீங்கள் ஒரு நிமிடத்திற்கு சற்று அமைதியாகஅமர்ந்து கவனிக்க விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் உத்தமமாய் சிந்திக்க வேண்டும்என்று நான் விரும்புகிறேன். அதை அறிவுபூர்வமான காரியம் செய்ய போகிறதா? சிந்தியுங்கள். உங்கள் ஸ்தாபனம் அதை செய்யப் போகிறதா? உங்கள் ஆளுமை (Pநசளழயெடவைல) அதை செய்யப் போகிறதா? அல்லது பரிசுத்த ஆவி அதை செய்யப் போகிறதா? 72நான் ஒரு காரியத்தை உங்களிடத்தில் கேட்க விரும்புகிறேன்? இந்த பெரிய ஒழுங்கற்ற நிலை இங்கே இருந்தபோது, இந்த எரிமலை குழம்புகள் குளிர்ந்து போனபிறகு, வெறுமனே பாறைகளைத் தவிர, வேறொன்றும் இங்கே இல்லாதிருந்தது.அவ்விதமாக அவள் (பூமி) அங்கே இருந்தாள். பரிசுத்த ஆவியானவர், கோழி தன் கூட்டுக்கு வருவது போல வந்து, பூமியின் மேலாக அடைகாக்க (brood) தொடங்கினார். அடைகாத்தல்என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'அடைகாக்கும் போது ஏற்படுத்தும்முனுமுனுப்பு ஒலி அல்லது கோழி தான் குஞ்சு பொரிக்கப் போகிற முட்டைகளின் மீதுஅமர்ந்து கொக்கரித்தபடி, தன் அன்பை வெளிப்படுத்துவது. 'உண்டாகக்கடவது“ என்று அது பேசத் தொடங்கினபோது, பூமியின் மீது ஒன்றுமில்லாதிருந்தது, ஆனால் நம்முடைய சரீரங்கள் (bodies)அங்கே கிடத்தப்பட்டு இருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது. நம்முடைய சரீரங்கள் பூமியிலிருந்து வந்தது என்று நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. நாம் பதினாறு மூலப் பொருட்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறோம். அவை பெட்ரோலியம், பிரபஞ்ச வெளிச்சம். ஓ, இன்னும், பொட்டாசியம், கால்சியம் (சுண்ணாம்பு) போன்ற பதினாறு மூலப் பொருட்களால்உண்டாக்கப் பட்டிருக்கிறது. அதுதான் நம்முடைய சரீரம். நாம் எப்படி அதை இவ்விதமாய் வளரச் செய்கிறோம். நாம் ஆகாரத்தை புசிப்பதால் அதை வளர செய்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் ஆகாரத்தை புசிப்பதற்கு ஏதோ ஒன்று மரிக்க வேண்டியதாயிருக்கிறது. இன்றைக்கு நீ புசிக்க வேண்டுமானால், ஏதோ ஒன்று நீ ஜீவிக்கும்படிக்கு மரிக்க வேண்டும். நீ ஜீவிக்க வேண்டியிருப்பதால் ஏதோ ஒன்று நீ ஜீவிக்கும்படிக்கு மரிக்க வேண்டியதாயிருக்கிறது. மாட்டிறைச்சியை நீ புசிக்க வேண்டுமானால், மாடு மரிக்க வேண்டியதாயிருக்கிறது, ஆட்டிறைச்சியை நீ புசிக்க வேண்டுமானால், ஆடு மரிக்க வேண்டியதாயிருக்கிறது. நீ மீன் புசிக்க வேண்டுமானால், மீன் மரிக்க வேண்டியதாயிருக்கிறது. நீ ரொட்டி புசிக்க வேண்டுமானால் கோதுமை மரிக்க வேண்டியதாயிருக்கிறது. உருளைக் கிழங்கை நீ புசிக்க வேண்டுமானால், உருளைக்கிழங்கு மரிக்க வேண்டியதாயிருக்கிறது. நீ பீன்ஸ் புசிக்க வேண்டுமானால், பீன்ஸ் மரிக்க வேண்டியதாயிருக்கிறது. அது எதுவாயிருந்தாலும், அது ஒரு ஜீவனாயிருக்கிறது. எனவே நாம் மரித்து போனவைகளை கொண்டுதான் ஜீவிக்கிறோம். 73எனவே, இப்பொழுது, என் சகோதரனே, நான் ஒரு காரியத்தை உன்னிடம் கேட்க விரும்புகிறேன். எனவே இங்கே நாம் ஜீவிப்பதற்கு ஒன்று மரிக்க வேண்டுமானால், எவ்வளவாய் நாம் மறுபடியும் சாவாமையுள்ளவர்களாக (immortal) ஜீவிப்பதற்கு ஏதோ ஒன்று மரிக்க வேண்டியதாய் இருக்கிறது. அதை எவ்வளவாய் அது செய்ய வேண்டியதாய் இருக்கிறது. புத்திசாலியான பிரசங்கிமார்களோ, ஒரு கத்தோலிக்க ஆசாரியனோ, ஒரு ரபியோ நினைக்கிற வழியில் அது இல்லை. நாம் மறுபடியும் ஜீவிக்கும்படிக்கு அவர் தன்னுடைய ஜீவனை கொடுத்து பரிசுத்த ஆவியை திரும்ப அனுப்புவதற்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவன் கொடுக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் கிறிஸ்துவும், 'நான் ஜீவிப்பதால், நீங்களும் ஜீவிப்பீர்கள்“ என்று கூறியிருக்கிறார். அதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கவனியுங்கள். நீங்கள் தினந்தோறும் ஜீவிக்க ஏதோ ஒன்று உங்களுக்காக மரிக்க வேண்டியதாயிருக்கிறது. அப்படியே நீங்கள் நித்திய காலமாய் ஜீவிப்பதற்கு ஏதோ ஒன்று மரிக்க வேண்டியதாய் இருந்தது. அது உங்களுடைய அறிவு பூர்வமானவைகளால் உண்டானதல்ல, அதைக் குறித்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் தேவன் கொடுக்கிற அந்த நித்திய ஜீவனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 74இப்பொழுது, பரிசுத்த ஆவி, அது புறாவைப் போல் முனுமுனுப்பு ஒலி எழுப்பிக் கொண்டுஅடைகாத்துக் கொண்டிருப்பதை கவனியுங்கள். இதோ அது பூமியின் மீதாக இப்பொழுது அடைகாத்துக் கொண்டிருக்கிறது. முதலாவது நீங்கள் அறிய வேண்டியது, நான் கவனிக்க துவங்கியபோது, அங்கே ஒரு சிறிய பெட்ரோலியம் ஒன்று சேர தொடங்கியது. அது என்ன? நாம் அதை சற்று கவனிப்போம். பெட்ரோலியமும், சில கால்சியமும், சில இரும்பும் ஒன்று சேர்ந்து கொண்டிருந்தது. அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது, ஒரு அழகான, சிறிய ஈஸ்டர் அல்லி மலர் (Easter lily) பூமிக்குள்ளாக இருந்து மேலே வந்து கொண்டிருந்தது. அது என்ன? பரிசுத்த ஆவியானவர் முனுமுனுப்பு ஒலியை எழுப்பிக் கொண்டு, அடைகாத்துக் கொண்டிருந்தார். பிதாவானவர் அதை கண்டு, 'அது அருமையாயிருக்கிறது, தொடர்ந்து அடைகாத்து கொண்டிரு“, என்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து பூமியிலிருந்து புல் மேலே வந்தது. அதன் பின் இன்னும் சற்று நேரம் கழித்து, மரங்கள் மேலே வந்தது. அதன் பின்னர் பறவைகள் பூமியின் புழுதியிலிருந்து பறந்து சென்றது. மறு படியும் அதன் பின்னர் மிருகங்கள் பூமியின் புழுதியிலிருந்து வந்தன. அதன் பின் என்ன நடந்தது? இதோ மனிதன் மேலே வந்தான். அது என்ன? பரிசுத்த ஆவியானவர், சபை அல்ல, பரிசுத்த ஆவியானவரே அடைகாத்து கொண்டிருந்தார். இதோ இங்கே மனிதன் மேலே வந்தபோது, தேவன், 'அவன் சரியாக காணப்படவில்லை“, என்றார். ஸ்திரீயானவள் மூல சிருஷ்டி (Original creation) கிடையாது. அவள் மனிதனின் உபசிருஷ்டியாக (by-product) இருக்கிறாள். எனவே தேவன் அறுவை சிகிச்சை மேஜை மீது தன்னுடைய காரியங்களை கிடத்தி, அவனுடைய பக்கவாட்டிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, ஒரு சிறிய இனியவளை (sweetheart) அவனுக்கு உண்டு பண்ணினார். அதன்பின் ஆதாமும், ஏவாளும் தங்கள் கரங்களை கோர்த்தபடி நடந்து சென்றார்கள். உங்களுக்கு தெரியுமா முதலாவது ஒரு பெரிய காற்று வீசியது. ஏவாள், 'ஓ, அன்பே அந்த காற்று...”, என்றாள். அவன், 'அமைதியாயிரு“, என்றான். அது அவனுக்கு கீழ்படிந்தது. ஏனெனில் அவன் ஒரு தேவனுடைய குமாரனாயிருந்தான். ஓ, அல்லேலூயா. 75ஓ, நான் பைத்தியக்காரனைப் போல் நடந்து கொள்வதாக இருக்கலாம். ஆனால் நான் அவ்விதமாக செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், கவனியுங்கள் சகோதரனே, இந்த காரியங்களை நான் நினைத்துப் பார்க்கும் போது, எனக்குள்ளாக இருக்கிற ஏதோ ஒன்று...அதை நான் நினைக்கும் போது, வயது மூப்பு இப்பொழுது என்ன வித்தியாசத்தை உண்டுப்பண்ண போகிறது? வேறு எந்த காரியமும் இப்பொழுது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணப் போகிறது? கவனியுங்கள், அதற்கு பிறகு சில நிமிடங்கள் கழித்து ஒரு பெரிய உறுமல் சத்தம் கேட்டது, அது அவளை பயமுறுத்த போவதில்லை.அது யாராயிருக்க கூடும்? அது சிம்மம் என்னும் சிங்கம். அவன், 'சிங்கமே, இங்கே வா“ என்றான். அவன் அதை ஒரு பூனையை தடவிக் கொடுப்பது போல தடவிக் கொடுத்தான். அதன் பிறகு சிறுத்தை, புலி இவைகள் வந்தது. ஓ, அப்படியானால் அது எப்பேற்பட்ட பெரிய பரதீசாக இருந்திருக்கும். அதன் பின்னர், சிறிய ஆதாம், 'அன்பே, இது தொலைக்காட்சியை போடக்கூடிய நேரமில்லை, சூரியன் அஸ்தமாகிக் கொண்டிருக்கிறது. இது நாம் சென்று ஆராதிக்க கூடிய நேரமாயிருக்கிறது“, என்றான். ஓ, தேவனே, இது நாங்கள் சென்று ஆராதிக்கக்கூடிய நேரமாயிருக்கிறது. இது, 'நாம் டாக்டர். ஜோன்ஸ், பில் பிரான்ஹாம் அல்லது வேறு யாரோ பிரசங்கிப்பதை சென்று கேட்கக்கூடிய நேரமில்லை”. ஆனால்,'நாம் சென்றுஆராதிக்கப் போகிறோம்“. அவர்கள் மேலே, மகத்தான, பெரிய திருகுசுருள் வடிவிலான இடத்திற்கு போகாமல், அங்குள்ள மரத்தடிக்கு அவர்கள் சென்றார்கள். அங்கு லோகாஸ், பரிசுத்த ஆவி, கிறிஸ்து என்ற ஒரு மென்மையான வெளிச்சமாகிய அபிஷேகம் கீழே இறங்கி வந்தது. அவர், 'பிள்ளைகளே, உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களை வைத்த இந்த பூமியிலே உங்கள் குடியிருப்பை களிகூர்ந்தீர்களா?” என்றார். 'ஆம், தகப்பனே, உமக்கு நாங்கள் எல்லா துதியையும் செலுத்துகிறோம்“. அவர்கள் ஜெபம் செய்த பின்னர் அவர் அவர்கள் அருகில் வந்து, அவர்களுடைய கன்னங்களில் முத்தமிட்டு, அவர்கள் உறங்கும்படிக்கு அவர்களை படுக்கவைத்தார். 76கவனியுங்கள் இரவில் நீங்கள் உங்கள் படுக்கையறைக்கு செல்வது அது எவ்வளவு அருமையாயிருக்கும்... என்னுடைய சிறு பையனுக்கு இவ்விதமாக நான் செய்வேன், சிறு ஜோசப்புடன் நானும், என் மனைவியும் நின்று கொண்டு,அவனை உறங்கவைப்பதற்காக படுக்கையில் கிடத்தி அவனுக்கு,ஒரு கன்னத்திலும் இன்னொரு கன்னத்திலும் முத்தமிடுவோம். நான், 'என் ஸ்திரீயே, ஏதோ ஒரு விதத்தில் அவனுக்கு உனக்கு இருப்பதைப்போன்ற கண்கள்இருக்கிறது“, என்பேன். அவளும், ';ஆமாம்,அவனுடைய வாய், இன்னும் அது போன்ற தோற்றத்தை பார்க்கும் போது உம்மை நினைவுக்கு கொண்டு வருகிறது“, என்பாள். அது பரிசுத்த விவாகத்தில் இணைக்கப்பட்டவர்களின் சாயலின் பிரதிபலிப்பாய் இருக்கிறது. அதேபோல் தேவன் ஆதாமையும், ஏவாளையும் கவனித்த போது, அவர்கள் அவரை போல் இருந்ததை பார்த்தார், ஏனெனில் அவர்கள் அவருடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருந்தார்கள், ஆகவே எப்படியாய் அவர்களுக்கு அவர் முத்தமிட்டு, அவருடைய மகத்தான இருதயமும் அதை எவ்வளவாய் உணர்ந்திருக்கும். 77அங்கே எந்த ஒரு தீங்கு செய்வதும் இல்லை. புலி அமைதலாயிருந்தது. சிம்மம் என்னும் சிங்கம் அமைதியாயிருந்தது. சகோதரனே, அதன் பிறகு பாவம் (sin) வந்தது. அந்த அருமையான நிலைமையை அது சீர்குலைத்து போட்டது. தன் முகத்தை அழகுபடுத்திக்கொள்வதற்கு ஏவாளுக்கு அழகு ஊட்டும் பொருட்கள் (Max Factor) தேவைப்பட்டிருக்காது. இல்லை ஐயா. அது, அவளுக்கு இந்த தேவனுடைய நித்திய ஜீவனின் நாணமே (blush) அவளை அழகாக வைத்தது. இன்றைக்கு இருக்கும் கை விரல்களையும், கரங்களையும் அழகுபடுத்தும் முறைகளும், இன்னும் மற்ற காரியங்களும் அவளுக்கு தேவைப்பட்டிருக்காது. பாவமே உங்களை அந்த இடத்திற்கு கொண்டு வந்தது. சகோதரனே, நான் உங்களுக்கு சொல்கிறேன், ஒவ்வொரு புருஷனும், ஸ்திரீயும்... ஏன் நாம் புசிக்கும் போது, நம்முடைய ஜீவனை புதுப்பித்துக் கொள்கிறோம். நான் ஒரு மருத்துவரிடத்தில், 'டாக்டர், ஒவ்வொரு முறையும் நான் புசிக்கும் போது, என்னுடைய ஜீவனை நான் புதுப்பித்துக் கொள்கிறேனா? அதற்கு அவர், 'அதுசரிதான், சகோதரன் பிரான்ஹாம்“. நான்,'நான் பதினாறு வயதுடையவனாக இருக்கும்போது புசித்த அதையேதான் இப்பொழுதும் நான் புசிக்கிறேன், நான் பதினாறு வயதுடையவனாக இருக்கும்போது புசித்து, எப்பொழுதும் பெரியவனாகவும், பலசாலியாகவும் வளர்ந்து கொண்டிருந்தேன், இப்பொழுதோ அதே உணவை புசித்தாலும் எப்பொழுதும் வயதானவனாகவும், பெலவீனமானவனாகவும் ஆகிக் கொண்டிருக்கிறேன், அது ஏன்?“ என்றேன். அது ஏன் என்று எனக்கு கூறுங்கள். தொடர்ந்து நான், 'ஒரு கூஜாவிலிருந்து கண்ணாடி குவளைக்குள் தண்ணீர் ஊற்றிஅது நிரம்பின பிறகு, உடனே மீண்டும் நான் எவ்வளவு அளவு தண்ணீர் அதிகமாக ஊற்றகிறேனோ அது அவ்வளவாக குறைய தொடங்குகிறது. அது எப்படி என்று எனக்கு விஞ்ஞான ரீதியாக விளக்குங்கள்” என்றேன். அவர், 'திருவாளர் பிரான்ஹாம் அவர்களே, அதை செய்ய முடியாது“, என்றார். நான், 'ஆம், அது முடியும், டாக்டர். என்னை மன்னிக்கவும், ஏனெனில் வேதாகமம் இவ்விதமாக கூறுகிறது. “அது மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்றும்… அவனுக்கு நியமிக்கப்பட்ட நாளை அவன் சந்திக்க வேண்டும்” என்றேன். ஆனால், சகோதரனே, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட உயிர்த்தெழுதலின் போது ஒவ்வொரு தோல் சுருக்கமும், ஒவ்வொரு வயதுமூப்பு அடையாளங்களும் இல்லாமல் போகும். அதுதாமே பாவத்தின் அடையாளமாயிருக்கிறது மற்றும் பாவத்தினால் வந்த இவையாவும் ஒழிந்து போம். அல்லேலூயா‚ அங்கே நாம் என்றென்றும் வாலிபமாய் இருப்போம். 78அன்றொரு நாள், எனக்கு இருந்த கொஞ்சம் தலைமுடியை நான் வாரிக் கொண்டிருந்தபோது என் மனைவி என்னிடத்தில், பில்லி, நீங்கள் வழுக்கை-தலை உடையவனாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்“, என்றாள். நான், 'என் இனியவளே, நான் என்னுடைய ஒரு முடியை கூட இழந்து போகவில்லை“, என்றேன். அவள், 'நீங்கள் என்ன கூறுகிறீர்கள், அன்பே“, என்றாள். நான், 'என்னுடைய தலைமுடி ஒன்றைக் கூட நான் இழக்கவில்லை“, என்றேன். அதற்கு அவள், 'அப்படியானால் அது எங்கே இருக்கிறது?“ என்றாள். நான், 'என் இனியவளே, நான் உன்னை ஒன்று கேட்கட்டும் அதற்கு பதில் சொல், பின்னர் நான் உனக்கு பதில் சொல்கிறேன்“, என்றேன். அவள், 'சரி,அன்பே“, என்றாள். நான், 'அதை நான் பெற்றுக் கொள்வதற்கு முன் அது எங்கே இருந்தது? அது எங்கேயோ ஓரிடத்தில் இருந்தது. அதை நான் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் எங்கே இருந்ததோ,உயிர்த்தெழுதலின் போது அது அங்கே எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது“, என்றேன். ஆம், சகோதரனே. 79எனவே, கவனியுங்கள். நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். உன்னை பூமியிலிருந்து வெளியே கொண்டு வரும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் அடைகாத்து, நீயும் பூமியிலிருந்து வெளியே வந்து, இப்பொழுது இங்கே ஒரு புத்திசாலியான நபராய் இருக்கிறாய். எனவே எந்த ஒரு தெரிந்தெடுக்கும் வாய்ப்பும் உனக்கு இல்லாதிருக்கும் போது, இன்றைக்கு நீ என்னவாக இருக்கிறாயோ அவ்விதமாக பரிசுத்த ஆவியானவர் உன்னை உண்டாக்கி இருப்பாரானால், முதன் முதலில் பூமியிலிருந்து உன்னை கொண்டு வந்த அவர், உன்னுடைய சரீரம் கிழக்கு தொடங்கி மேற்க்கு வரை சிதறடிக்கப்பட்டிருந்தாலும் கடைசி நாட்களில் உன்னை உயிரோடு எழுப்புவது எவ்வளவு நிச்சயம். நினைவில் கொள்ளுங்கள், முதன் முதலில் பரிசுத்த ஆவியானவர் அடைகாக்க துவங்கியபோது, உங்களுடைய சரீரங்கள் இங்கே இருந்தன. அது இங்கே இல்லையென்றால், வேறு எங்கிருந்து அது வந்திருக்கும்? உன்னுடைய கால்சியம், பொட்டாஷ், பிரபஞ்ச வெளிச்சம், இங்கே பூமியின் மேலாக இருக்கும் உன்னுடைய ஜீவன்... இவையெல்லாவற்றையும் கொண்டு தேவன் உன்னை ஒன்று சேர்த்தார். அதை வேறு யாராலும் செய்ய முடியாது. பொட்டாஷ், கால்சியம், இவையெல்லாவற்றையும் ஒன்று சேர்த்து உங்களால் மனிதனை உண்டாக்க முடியாது. அவன் இன்றைக்கு என்னவாயிருக்கிறானோ அவ்விதமாய் அவனை உண்டாக்குவதற்கு தேவ ஆவியினுடைய ஜீவன் அதற்கு அவசியமாயிருக்கிறது. 80என்னுடைய நண்பர்களே, தேவன் அறிவுப்- பூர்வமானவைகளை கொண்டு சபையை நடத்தவில்லை. அது தாமே தேவனுடைய அசைவாடுதலாயிருக்கிறது. எப்படியெனில், 'நீ என்னை நேசிக்கிறாயா? நீ என்னை விசுவாசிக்கிறாயா?“ என்று கூற முயற்சிப்பதாயிருக்கிறது. எனக்கு எந்த ஒரு தெரிந்தெடுக்கும் வாய்ப்பும் இல்லாதபோது, இன்றைக்கு நான் இருக்கும் இந்நிலைக்கு என்னை அவர் கொண்டு வந்திருப்பாரானால், எவ்வளவாய் எனக்கு நித்திய ஜீவனை கொண்ட ஜீவனை கொடுப்பது நிச்சயம். நானும் அவருக்கு பதில் கொடுக்கும் வகையில், 'ஆம், பரிசுத்த ஆவியானவரே, உலகம் என்ன கூறினாலும் அதைப் பற்றி நான் கவலைப்படாமல், நான் உங்களை நேசிக்கிறேன், நான் உங்களை நேசிக்கிறேன், நான் உங்களை நேசிக்கிறேன்”, என்று கூறுவேன். அந்த மகத்தான நாளில் என்னுடைய கால்சியத்தையும், பொட்டாசியத்தையும் அவர் எவ்வளவாய் கண்கானிப்பார். அவர் பேச, அந்த அழிவில்லாத ஜீவன் திரும்பவும் வரும்போது தலையில் உள்ள என் ஒவ்வொரு முடியும், என்னுடைய சரீரத்தில் இருந்த ஒவ்வொருதுளி பெலனும் கொண்ட அந்த சரீரம் நொடிப்பொழுதில் தோன்றும். ஆம், சகோதரனே. சபையை பத்திரமாக பாதுகாக்கும் வேலையை பரிசுத்த ஆவிக்கு தேவன் கொடுத்திருக்கிறார். 81கவனியுங்கள். வேதாகமம், 'அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டு புறப்பட்டு, வனாந்திரத்திற்கு சுற்றித் திரிந்து, அது திரும்பி வரும்போது அது வித்தியாசமாய் இருப்பதை அதுகாணும்“, என்ற கூறுகிறது. இங்கே தான் காரியம் இருக்கிறது. கவனியுங்கள், இப்பொழுது ஒருவேளை நான் நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்ளலாம், இருப்பினும் உங்களுக்கு இன்னும் அதிகமான நேரம் இருக்கிறது. கவனியுங்கள் நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்.இதற்கு முன் நடனங்களுக்கும், சினிமாவுக்கும் சென்று அங்கே இரவு முழுவதும் உட்கார்ந்து இருந்தீர்கள். கவனியுங்கள், இது நித்திய ஜீவனாயிருக்கிறது. 82உங்களுடைய வாழ்க்கை மேலும்-கீழுமாய் இருப்பதற்கு காரணம், அந்த அசுத்த ஆவி உங்களைவிட்டு புறப்பட்டு சென்ற பின் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே வந்து ஒரு புதிய இருதயத்தையும் அல்லது வேறு ஏதோ காரியத்தையும் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்களுடைய நிஜ ரூபத்தை காண்பிக்க வேண்டியதாய் இருக்கிறது. நீங்கள் ஏதோ ஒரு சிறு, ஒரு போலியான வெளி வேஷம் போடுகிறீர்கள். அது (அசுத்த ஆவி) திரும்பி உங்களிடத்தில் வரும்போது, இன்னுமாக அதே கோபத்தையும், அதே விருப்பு வெறுப்பையும், மற்றெல்லாவற்றையும் உடையவர்களாய் மோசமான இடத்தில் பெரும்பாலும் சட்ட விரோதமான செயல்கள் நடக்கும் இடத்தில் நீங்கள் ஜீவிப்பதை அது கண்டுபிடிக்கும். ஆனால் பரிசுத்த ஆவி அங்கே வரும்போது, தேவன் நிலத்தை சமன் செய்யும் தன்னுடைய பெரிய இயந்திரத்தை (bulldozer) பரலோகத்திலிருந்து அனுப்பி, அவையெல்லாவற்றையும் சுரண்டி எடுத்து, சமன் செய்து வெளியே தள்ளிவிடும். உங்களுக்கு தெரியும், காரணம் அவர் அங்கே இருப்பதால், அங்கே எந்த ஒரு மோசமான காரியமும் இருக்காது; அங்கே எந்த ஒரு பகைமை (hatred) இருக்காது; அங்கே எந்த ஒரு கசப்புணர்ச்சி (malice) இருக்காது. எனவே அங்கே அவன்பரிசுத்த ஆவி வாசம் செய்கிற சிறப்பான, பெரிய மாளிகையை காண்பான். அவர் அங்கே இருப்பதால், மாளிகையின் மாடி (big mansion) முழுவதும் அழகான பூக்கள் நிறைந்த அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு என்கின்ற பூக்களை அவருடைய பிரசன்னம் கொண்டுவரும். அது இனிமேல் ஒரு போதும் பன்றிகள் வாசம் செய்கிற இடமாக இருக்காது; அது பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிற இடமாக இருக்கும். அல்லேலூயா. ஓ, நான் பிரசங்கத்தை முடிக்க வேண்டும், சகோதரனே. ஆனால் இப்பொழுதுதான் நான் பிரசங்கிக்க வேண்டும் என்ற உணர்வை பெற்றிருக்கிறேன். நான் இப்பொழுது அருமையாக உணர்கிறேன். அது சரி. 83சகோதரனே, நான் உங்களுக்கு ஒன்றை சொல்லட்டும். இன்றைக்கு இந்த சபைக்கு தேவைப்படுவது என்னவென்றால்,அன்பையும், ஐக்கியத்தையும் கொண்டு வருகிற கட்டுபாட்டை பரிசுத்த ஆவி எடுத்துக் கொண்டு, உண்மையிலேயே தேவன் வாசம் செய்யும் இடத்துக்கு அது திரும்பி வர வேண்டும். கவனியுங்கள். இந்த உலகத்துக்கு அது தேவையாயிருக்கிறது, அதை நான் உங்களுக்கு கூற போகிறேன். ஒருசில நொடிகள், அதன்பிறகு கர்த்தருக்கு சித்தமானால் நாம் முடிப்போம். 84நான் ஒரு வேட்டைக்காரன். மற்றும் நான் இயற்கையை நேசிக்கிறவன் என்று உங்களுக்கு தெரியும். அநேக வருடங்களுக்கு முன் வேட்டைக்காக நார்த் உட்ஸ் (North Woods) என்ற இடத்திற்கு செல்வது வழக்கம். இப்பொழுதும் கூடஎன்றாவது ஒரு முறைக்கு அங்கு செல்வேன். அங்கே ஒரு நல்ல நண்பனை சந்தித்தேன், பெர்ட் கால். ஒரு அருமையான மனிதன், அந்த மனிதன் இன்றைக்கு இக்கட்டிடத்தில் உட்கார்ந்திருக்கலாம். அவர் ஒரு அருமையான வேட்டைக்காரர். அவருடன் நான் வேட்டையாட விரும்புவேன், ஏனெனில் அவர் பெலமும், திடகாத்திரமானவராகவும் இருந்தார். அங்கிருக்கும் மலைகளில் ஏறி, அநேக இடங்களுக்கு நாங்கள் சென்றிருக்கிறோம். அவருக்கு நல்ல, கூரிய கண் பார்வையுண்டு, அவரால் தூரத்திலுள்ள வேட்டையாடக் கூடியதை கவனிக்கமுடியும். அவரோடு கூட வேட்டையாடுவதை நான் களிகூர்வேன். அவ்வளவு சுலபமாக காட்டில் தொலைந்து போகவும் மாட்டார், உங்களால் அவரை காட்டில் திசை திருப்பவும் முடியாது. அங்கிருக்கும் ஒவ்வொரு மரங்களையும், அடையாளங்களையும், மற்ற காரியங்களையும், எப்படி போகவேண்டும் என்பதையும் கூடஅறிவார். ஒரு முறை நாங்கள் அங்கே இருந்தபோது... அவர் ஒரு நல்ல மனிதன், அருமையான வேட்டைக்காரன், ஆனால் அவர் ஒரு கொடூரமான இருதயமுடையவர். ஓ, அவர் தன்னுடைய இருதயத்தில் அவ்வளவு கொடுமையானவராக இருந்தார். நான் ஒரு பிரசங்கி என்று அவர் அறிந்திருந்ததினால் வேடிக்கைக்காக சிறிய மான் குட்டிகளை (fawns) கொல்வார். நான், 'பெர்ட் அப்படி செய்வதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா“, என்றேன். அவர், 'ஆ, பிரசங்கியாரே, உங்கள் வேலையை நீங்க பாருங்க. நீங்கள் ஒரு பெலவீன இருதயமுடையவர் “, என்றார். நான், 'பெர்ட்,அப்படி செய்யவேண்டாம்“, என்றேன். எனவே, கர்த்தர், நீ ஒரு மான் குட்டியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் அனுமதிக்கும்போது, அப்பொழுது அது முற்றிலும் சரிதான்.அது உன்னுடைய காரியம். ஆபிரகாமும் ஒரு கன்றுகுட்டியை கொன்று, தேவனுக்கு புசிக்கக் கொடுத்தான். அது சரிதான். அது முற்றிலும் சரிதான். ஆனால் இந்த முழு மான் கூட்டத்தை கொல்லக் கூடாது.... 85எனவே அவர் அவ்வளவு கொடூரமானவராக இருந்தார். ஆகவே ஒரு வருடம் நான் அங்கே சென்றிருந்போது, அவர் ஒரு ஊதலையும் (whistle)கொண்டு வந்தார். அவர் அந்த சிறிய ஊதலை கொண்டு, ஒரு சிறிய மான்குட்டி கத்துவதுபோல, ஊதினார். என் வாழ்நாளில், அப்படிப்பட்ட ஆள்மாறாட்டம் செய்யப்படுதல் அல்லது பிறர்போல் நடித்து காட்டும் காரியத்தை நான் கேட்டதில்லை. நான், 'பெர்ட்,அதை நீ மாட்டாய் அல்லவா?“ என்றேன். அவர், 'ஆ, வேலையைப்பார், பிரசங்கியாரே. உங்கமாதிரி ஆட்களிடத்தில் காரியமேஇப்படித்தான்; நீங்க ரொம்பவும் பெலவீன இருதயமுடையவர் “, என்றார். நான், 'பெர்ட்,வெட்கமாகஇல்லையாƒ நீ அப்படி செய்யக் கூடாது“, என்றேன். நாங்கள் தொடர்ந்து காடுகளுக்கு உள்ளாக சென்று, கிட்டத்தட்ட அரை நாளும் அல்லது அதற்கு மேலாகவும் வேட்டையாடி, எந்த ஒரு கால்தடப் பதிவையும் அல்லது வேறொன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் நாங்கள் கீழே குணிந்து பார்த்தபோது, அங்கே ஒரு சிறிய துவாரம் இருந்தது. அவர் தன்னுடைய பைக்குள் கைவிட்டு அந்த ஊதலை எடுப்பதை நான் கவனித்தேன். “ஓ, இல்லை அவர் அப்படி செய்யக் கூடாது”, என்று எண்ணினேன். அவர் ஒரு சிறிய மான்குட்டி கத்துவது போல, ஒரு சிறிய சத்தத்தை எழுப்பினார். திடீரென்று, சரியாக எதிர்ப் பக்கத்தில்,ஒரு உயரமான, பெரிய, தாய்மான் மேலே வந்தது. அவள் மேலேவந்தாள், நான் அதனுடைய சிறப்பான, பெரிய மிருதுவான காதுகளையும், பெரிய பழுப்பு நிற கண்களையும் பார்த்தேன். என்னிடத்திலிருந்து முப்பது கஜ (ஒரு கஜம் -மூன்று அடி) தூரத்தில் கூட இல்லை. பெர்ட் என்னைப் பார்த்து, சிரித்தார். நான், 'ஓ, பெர்ட்,அப்படி செய்யாதே, நீ அப்படி செய்யப் போவதில்லை“,என்று எண்ணினேன். 86அங்கே, அந்த அழகான மிருகம் தன் தலையை நிமிர்த்தி, அவள் நடந்து வருவதை என்னால் பார்க்க முடிந்தது. அது என்னவாயிருக்கிறது? அவள் அப்படி அங்கே நடந்து வரும்படி செய்தது எது? அது அவளுக்குள்ளாக இருந்த ஏதோ ஒன்று. ஒரு தாயினுடைய அன்பு, அது ஒரு குட்டியின் சத்தத்தை கேட்டது. அங்கே வெளியே அவள் நடந்து வந்தாள். காரியம் இவ்விதமாக இல்லையென்றால், வேறு எதற்காகவும் அது அப்படி செய்திருக்காது. ஆனால் அது என்ன? அவள் ஒரு தாயாக இருக்கிறாள். அந்த குணம் பரம்பரையாக அதற்குள் இருந்தது. அதிலிருந்து அவளால் விலகி இருக்க முடியவில்லை.ஒரு மான்குட்டி அழுது கொண்டிருந்ததால், அவளுக்குள் இருந்த தாயுள்ளம் அவளை அங்கே வழி நடத்தி சென்றது. அவள் அந்த மான்குட்டியை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். பெர்ட் இந்த நெம்புகோலை எடுத்து பின்னுக்கு தள்ளி, துப்பாக்கி குழலுக்குள் தோட்டாக்களை அடைத்து, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து குறிவைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். ஓ, அவர் குறி தப்பாமல் சுடக்கூடியவர். 'ஓ, தேவனே, அவர்அப்படி செய்ய விடவேண்டாம்“, என்று நான் எண்ணினேன். என்னே‚ அங்கே அந்த தாய் வெளியே வந்து, அப்படிப்பட்ட அன்பை வெளிப்படுத்தும் போது, அவரால் எப்படி அதை செய்ய முடிகிறது? அங்கே நெம்புகேல் அழுத்தப்பட்டவுடன், துப்பாக்கியில் தோட்டாக்களை அடைத்து வைத்திருக்கும் தாழ்ப்பாள் திறந்துக் கொண்டது. அவர் சரியாக அந்த தாயின் இருதயத்தை குறிவைத்து, இலக்கை சரியாக குறிபார்க்க உதவும் அந்த தொலை நோக்கி நுண்வலையை சரிசெய்து கொண்டிருந்தார். இன்னும் சிறிது நொடிக்குள் அவர் அந்த தாயினுடைய இருதயத்தை சுட்டு முழுவதும் சிதறடிக்கப் போகிறார் என்று எனக்கு தெரியும். எனவே, நான்,”ஓ, எப்படி அதை அவரால் செய்ய முடிகிறது? எப்படி அவரால் அதை செய்ய முடிகிறது? என்று நினைத்தேன். நான், 'ஓ, நான் அதை பார்க்க கூடாது“, என்று எண்ணினேன். 87சிறிது நேரம் கழித்து, ஒரு நொடிப்பொழுதில், அந்த தாய்மான் இந்த வேட்டைக்காரரை பார்த்துவிட்டது. அவள் திடுக்கிட்டாள். அவள் தலையை மேலே நிமிர்த்தினாள். அவள் ஓடினாளா? இல்லை. ஏன்? அங்கே ஒரு மான்குட்டி தொல்லையில் இருந்தது. அந்த மான்குட்டியை அவள் கண்டுபிடித்தாக வேண்டும். அவளுடைய இருதயம் சுடப்பட்டு சிதறடிக்கப் போவதாக இருந்தாலும், அந்த மான்குட்டியை அவள் கண்டுபிடித்தே ஆக வேண்டும். ஏனென்றால் அது தொல்லையில் இருக்கிறது. ஏன்? சபை ஏதோ வேஷம் போடுவது போல அவளும் ஏதோ வேஷம் போடவில்லை. அது ஏதோ காரியம் அவளுக்குள்ளாக இருக்கிறது. அவள் ஒரு தாய். அவள் அந்த மான்குட்டியை கண்டுபிடித்தே ஆக வேண்டும். தன்னுடைய கண்ணை அந்த வேட்டைக்காரர் மேல் வைத்த வண்ணம், நடக்க தொடங்கினாள். அந்த துப்பாக்கிகுழல் கீழே இறங்குவதை நான் கவனித்தேன். நான், ஓ, தேவனே... கொஞ்சம் நிமிடங்களுக்கு என் தலையை நான் திருப்பிக் கொள்ளட்டும். நான் துப்பாக்கி சுடப்படும் சத்தத்தை கேட்கவில்லை. நான், 'என்ன நடந்தது? என்னதான் நடந்தது என்று ஆச்சரியப்பட்டேன்“. அதை பார்க்கும்படிக்கு நான் திரும்பினேன். எனவே நான் அப்படி திரும்பினபோது, துப்பாக்கி குழல் இவ்விதமாய் போவதை கவனித்தேன். அவர் திரும்பி, என்னை பார்த்தார். அவர் துப்பாக்கியை தரையில் போட்டு, தன் கரத்தினால் என்னை பிடித்து, 'பில்லி, அப்படிப்பட்ட காரியம் இனிமே எனக்குவேண்டாம். என்னால் இனிமேல் அதை பொறுத்துக்கொள்ள முடியாது. பில்லி, உனக்கு இருக்கும் கிறிஸ்துவ இருதயத்தை போல் எனக்கும் தேவன் அதை கொடுக்கும்படிக்கு ஜெபியுங்கள். இவ்விதமாய் நான் இருக்க விரும்பவில்லை“, என்றார். உடனே அந்த இடத்திலேயே இரக்கமற்ற இருதயத்தை கொண்ட அந்த மனுஷனை இயேசு கிறிஸ்துவின் நேசிக்கும் ஆவியினிடத்தில் வழி நடத்தினேன். ஏன்? என்ன நடந்தது? என்ன நடந்தது? அதை அவன் புரிந்து கொண்டான். என்ன நடந்தது? காரணம், உண்மையிலேயே அசலான அன்பு அங்கே காட்சியில் வந்ததை அவன் பார்த்தான். சகோதரனே, சகோதரியே, இன்றைக்கு சபைக்கு தேவையானது அது ஜீவியத்தில் காண்பிக்க வேண்டும், வேஷத்தை தரித்துக் கொள்வதல்ல,அறிவுப் பூர்வமான கல்வி அல்ல, ஆனால் அது ஜீவியத்தில் காண்பிக்கபட வேண்டும், நம்முடைய இருதயத்தில் இருக்கும் அசலான தேவனுடைய அன்பு ஜீவியத்தில் காண்பிக்கப்பட வேண்டும். 88நாம் தலைகளை தாழ்த்துவோம். அது என்ன? ஒரு வேளை நீண்ட நாட்களாக நீ ஒரு சபை அங்கத்தினனாக இருக்கலாம், ஆனால் நீ... பெற்றிருக்கிறாயா. 'நான் இதை விட வேண்டியதாயிருக்கிறது. நான் அதை செய்ய வேண்டியதாயிருக்கிறது என்று சொல்கிறாயா? அந்த வழியில் தான் நீ நடந்து கொள்கிறாயா? அது அறிவுப்பூர்வமானதாயிருக்கிறது. ஆனால் உனக்குள், அந்த காரியம் இருக்கிறதா? உனக்குள் அந்த காரியம், அந்த தேவனுடைய அன்பு உன் இருதயத்திற்குள் இருக்கிறதா? அது இல்லாதபோது, ஏன் நீ அதை இன்று ஏற்றுக் கொள்ளக்கூடாது? ஏன் நீ அதற்கு பதிலாக இன்னொன்றை பெற்றுக் கொள்ளவேண்டும். நீ ஒரு சபையை சேர்ந்திருப்பதினால், நீ ஒரு கிறிஸ்தவன் என்பதை அறிந்துக்கொள்ளக் கூடிய எல்லாவற்றையும் பெற்றிருக்கிறாயா? நீ சத்தமிடுவதால், நீ ஒரு கிறிஸ்தவன் என்று அறிந்துகொண்டதெல்லாம் அவ்வளவுதானா? நீ அந்நியபாஷையில் பேசுவதால், நீ ஒரு கிறிஸ்தவன் என்று அறிந்து கொண்டதெல்லாம் அவ்வளவுதானா? இவை எல்லாவற்றையும் நானும் விசுவாசிக்கிறேன், இருப்பினும் சூனியக்காரர்களும், மந்திரவாதிகளும், அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு கிறிஸ்தவன் என்று அடையாளம் கண்டு கொள்ளும்படிக்கு ஒருவேளை உனக்கு கைகளில் எண்ணெய்யோ அல்லது முகத்தில் இரத்தமோ அல்லது அது போன்ற ஏதோ ஒன்று வந்திருக்கலாம். நீ அறிந்து கொண்டதெல்லாம் அவ்வளவுதானா? சகோதரனே, நீ பரிதபிக்கப்பட்டவனாயிருக்கிறாய். ஆமாம். பெந்தெகொஸ்தே வானம் முழுவதும் அசலான காரியம் நிரம்பி இருக்கும்போது நீ ஏன் மாற்றுப் பொருளை எடுத்துக்கொள்கிறாய்? 89'அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அற்புதங்களானாலும் ஒழிந்து போம், அறிவானாலும் ஒழிந்துபோம், தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்து போம். அன்பு என்னும் நிறைவானது வரும்போது, அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்“. அது பரிசுத்தவான்கள் தூதர்கள் பாடலை காட்டிலும் என்றென்றும் நிலைத்திருக்கும். கவிஞர்கள் அதைக் குறித்து எழுதலாம். ஆனால் அதை விவரித்து சொல்ல முடியாது. 90இப்பொழுது, அதைக் குறித்து நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கையில், உங்களிடத்தில் அது இல்லாதபோது, நீங்கள் உண்மையிலேயே அந்த அசலான அன்பை உங்கள் இருதயத்தில் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? எனவே தேவனுடைய ஊழியக்காரன் என்ற வகையில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் உன்னை சர்வவல்லமையுடைய தேவனுடைய பிரசன்னத்தில் கொண்டு வருகிறேன். உண்மையிலேயே உத்தமமானது ஒரு துளி உனக்குள் இருக்குமானால், தேவன் அதை இம்மதிய வேலையில் வெளியே கொண்டு வரும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். அந்;த அனுபவம் உனக்கு இல்லையென்று நீ உண்மையிலேயே அறிந்திருக்கிறாயா? தேவனிடத்தில் உன் கரங்களை உயர்த்தி, 'தேவனே, கிறிஸ்துவின் நாமத்தினாலே, என்னுடைய இருதயத்தில் அதைத்தாரும்“, என்று கூறுவாயாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதுஅருமையாயிருக்கிறது. ஓ, எங்கும் எல்லாவிடத்திலும், அந்த மான் தன்னுடைய தாயின் அன்பை காட்சியில் வெளிப்படுத்தினது போல, கிறிஸ்தவ அன்பானது காட்சியில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மற்றவர்களை கிறிஸ்துவுக்காக ஜெயிக்கும் வகையில் என்னுடைய கிறிஸ்தவ அன்பு, என்னுடைய உணர்சிவசப்படுத்தல் அல்ல, ஆனால் என்னுடைய கிறிஸ்தவ அன்பானது காட்சியில் காண்பிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஓ, தேவனுடைய அன்பு, எவ்வளவு விலையேறப்பெற்றதும், சுத்தமுள்ளதாயும் இருக்கிறது‚ எவ்வளவாய் அளவிடமுடியாததும், பெலமுள்ளதாயும் இருக்கிறது. அது பரிசுத்தவான்கள் தூதர்கள் பாடலை காட்டிலும் என்றென்றும் நிலைத்திருக்கும். 91உண்மையிலேயே அது உனக்கு தேவைப்படுகிறதா? நீ என்னை தேவனுடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப்பாயானால், நீ மேல் மாடத்தில் (balcony) இருந்தாலும் அல்லது வேறு எங்கிருந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. சகோதரனே, நேரத்தை பார்க்க வேண்டாம். நான்கு மணி அல்லது நான்கு மணிக்கு கொஞ்சம் அதிகமாகிவிட்டது என்று நினைக்க வேண்டாம்; அதைப்பற்றி நினைக்க வேண்டாம். நித்தியம் (Eternity) என்றால் என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். நீ அதை பெற்றுக்கொள்ளவில்லையென்றால், முடவர்களை நடக்கச் செய்யும்படிக்கும், குருடர்கள் பார்வை அடையும்படிக்கும் தேவன் என் ஜெபத்தை கேட்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா. அது ஒரு ஜெபம் மட்டுமே, அவ்வளவுதான். நான் தேவனுடைய ஊழியக்காரன் என்பதை விசுவாசிப்பதும், அவ்விதமான அனுபவம் உனக்கு தேவைப்படுவதும் உனக்கு உதவி செய்யும்... இருநூறு அல்லது அதற்கு மேற்பட்ட கரங்கள் உயர்த்தப்பட்டது என்று நான் யூகிக்கிறேன். நீங்கள் சரியாக இங்கே வந்து என்னோடு கூட நிற்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடன் கைகளை குலுக்கி, உங்களோடு கூட சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறேன்.'நான் எப்படி இருக்கிறேனோ அவ்விதமே“ என்ற பாடலை நாம் பாடும்போது உங்களால் கூடுமானால் இங்கே இறங்கி வாருங்கள். நான் இருக்கிற வண்ணமே, (ஓ, அதுதான் வழி) அவ்விதமே என்னை ஏற்றுக்கொண்டு, வரவேற்று, மன்னித்து, சுத்தம் செய்து, விடுவியும், ஏனெனில் உம்முடைய வாக்குதத்தை நான் நம்புகிறேன், ஓ தேவ ஆட்டுகுட்டியே உம்மண்டையில் நான் வருகிறேன்‚ நான் வருகிறேன்‚ இவ்விதமே நான் இருக்கையில்,என்ஆத்துமாவிலிருந்து ஒரு சிறிய கறை கூட இல்லாமல் என்னை விடுவிக்க தாமதியாதேயும். ஒவ்வொரு கறையையும் கழுவக்கூடிய உம்முடைய இரத்ததண்டையில்...